/tamil-ie/media/media_files/uploads/2020/01/New-Project-2020-01-12T223321.537.jpg)
sister and brother sentiment, sister - brother sentiment viral video, அண்ணன் தங்கை பாசம், வைரல் வீடியோ, viral video, facebook video, funny video
திருமணம் முடிந்து புகுந்தவீடு செல்லும் பெண் தனது அண்ணனின் பிரிவைத் தாங்க முடியாமால் கட்டிப்பிடித்து அழுகிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர் பலரும் நிஜத்தில் ஒரு பாசமலர் அண்ணன் தங்கை என்று உருக்கம் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படத்துக்கு எப்போதும் சினிமா ரசிகர்கள் இடையே ஒரு வரவேற்பு உள்ளது. சிவாஜி கணேசனின் பாசமலர் முதல் விஜய்யின் திருப்பாச்சி வரை இந்த அண்ணன் தங்கை பாசம் என்பது ரசிகர்களைக் கவர்ந்து வந்துள்ளது.
சினிமாவில் மட்டுமே பாசமலர் அண்ணன் தங்கை பாசம் இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அப்படி வெளிப்படுகிறதா என்றால் அரிதாகத்தான் நிகழ்ந்துள்ளன.
https://www.facebook.com/KuwaittamilpasangaOfficial/videos/946403665754065/
அந்த வகையில், அண்ணன் தங்கை பாசத்தைக் கூறும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு பெண் திருமணம் முடிந்து மறுவீட்டுக்கு செல்கிறார். அப்போது அவருடைய பிரிவைத் தாங்க முடியாமல் அண்ணன் அழ, அண்ணன் அழுவதைப் பார்த்து தங்கையும் அழுகிறார். பின்னர் அண்ணனை தங்கை சமாதானப்படுத்தி தேற்றுகிறார். இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் நிஜ வாழ்க்கையிலும் இப்படி ஒரு பாசமலர் அண்ணன் தங்கையா என்று நெகிழ்ந்துபோய் பகிர்ந்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.