அரசியல் மேடையில், ஆக்ரோஷமான பேச்சுக்கும் சர்ச்சைக்கும் சொந்தக்காரரான சீமான் தனது சகோதரியின் மகள் நிச்சயதாத்த விழாவில், மேடையில் கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அதிரடியான, அனல் பறக்கும் ஆக்ரோஷமான பேச்சுக்கு சொந்தக்காரர். தனது பேச்சில் ஆக்ரோஷம் மட்டுமல்ல, கோபம், நகைச்சுவை, பாடல், குபீர் சிரிப்பு, உணர்ச்சிப்பூர்வமான பேச்சு என தமிழக அரசியலில் தனித்துவமான மேடைப்பேச்சைக் கொண்டவர். அவருடைய ஆக்ரோஷமான பேச்சைக் கேட்டு அவரை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அவருடைய அதிரடியான கருத்துகள் சர்ச்சைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தனது சகோதரி மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற சீமான், மேடையிலேயே கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் சகோதரி மகளான கயல்விழியின் நிச்சயதார்த்த விழா சிவகங்கையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட சீமான், தனது சகோதரி மகளை வாழ்த்தினார். இதைத் தொடர்ந்து, சீமான் மேடையில் இருவரையும் வாழ்த்தி பேச தொடங்கியபோது, திடீரென உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் கலங்கி நெகிழ்ச்சியாக இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”