Advertisment

ஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்!

Viral news in tamil, Sitting on snakes gives 10000 dollar video goes viral: நீங்கள் 10000 டாலருக்காக பாம்புகள் மீது உட்கார்ந்திருப்பீர்களா? என்ற தலைப்பில் உள்ள அந்த வீடியோவில் நான்கு நண்பர்கள் ஒரு டராண்டுலா அவர்கள் மீது ஊர்ந்து செல்ல அனுமதிப்பது போன்ற பல்வேறு சவால்களை செய்கின்றனர்.

author-image
WebDesk
Apr 14, 2021 11:08 IST
ஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்!

ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் போட்டியாளர்களுக்கு வினோதமான சவால்களைக் கொண்டு வருகின்றன. இதில் மற்றுமொரு வித்தியாசமாக பிரபலமான அமெரிக்கன் யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் சில விசித்திரமான சவால்களை செய்து வருகிறார். அவரின் உண்மையான பெயர் ஜிம்மி டொனால்ட்சன். சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்ட  அவரது வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் பயந்து போயுள்ளனர்.

Advertisment

தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில், தனது நண்பர்களுக்கு தொடர்ச்சியான வினோதமான சவால்களை முடித்து பரிசுத் தொகையை வெல்ல சவால் விடுத்தார். அந்த சவால்கள் எல்லாம் சிலருக்கு நடுக்கத்தை வரவைக்கலாம். இருப்பினும் அவரது சில நண்பர்கள் அந்த சவால்களை முயற்சிக்கின்றனர்.

நீங்கள் 10000 டாலருக்காக பாம்புகள் மீது உட்கார்ந்திருப்பீர்களா? என்ற தலைப்பில் உள்ள அந்த வீடியோவில் நான்கு நண்பர்கள் ஒரு டராண்டுலா அவர்கள் மீது ஊர்ந்து செல்ல அனுமதிப்பது, பாம்புகள் நிறைந்த குளியல் தொட்டியில் உட்கார்ந்துக் கொள்வது, பாம்புகள் நிறைந்த பெட்டியிலிருந்து பணத்தை எடுப்பது மற்றும் எலிகள் நிறைந்த அறையில் இருப்பது போன்ற பல்வேறு சவால்களை செய்கின்றனர்.

இதில், சவாலை முடிக்க முடிந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் யூடியூபர் ஆயிரக்கணக்கான டாலர்களை வழங்குகிறார். 14 நிமிடம் ஒடக்கூடிய இந்த வீடியோ 20 மில்லியனுக்கும் அதிகமான வியூவ்ஸ்ஐ பெற்றுள்ளது

இருப்பினும் அந்த வைரல் கிளிப்பின் கமெண்ட் பகுதியில் நெட்டிசன்களில் ஒரு பிரிவினர் வினோதமான அந்த சவால்களுக்கு எதிர்வினையாற்றுகின்றனர்.  மற்றொரு பிரிவினர் சவால்களை முடித்தவுடன் பணம் கொடுக்கப்படுவதால் இதற்கு வரவேற்பளிக்கவும் செய்கின்றனர்.

இந்த வீடியோவைப் பார்த்து உங்களுக்கும் தைரியமிருந்தால் பணத்தை வெல்லுங்கள். வீடியோ இதோ…

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Viral Video #Youtube Video #Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment