வயதோ “ஆறு” -டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் ஆவதற்கு படுவதோ ‘ஆறாத’ ரணம் : வைரலாகும் வீடியோ

6 years old chinese girl video : சீனாவில் 6 வயது பிஞ்சுக்குழந்தை ஒன்று, டேபிள் டென்னிஸ் பயிற்சியில் கண்ணீர் மல்க தன்னை அதிபயங்கரமாக ஈடுபடுத்திக்கொள்ளும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

By: December 17, 2019, 10:17:45 AM

சீனாவில் 6 வயது பிஞ்சுக்குழந்தை ஒன்று, டேபிள் டென்னிஸ் பயிற்சியில் கண்ணீர் மல்க தன்னை அதிபயங்கரமாக ஈடுபடுத்திக்கொள்ளும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


சீனாவை சேர்நத லீ இயிக்கு வயது என்னவோ 6 தான். அவருக்கு டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் ஆவது என்பது லட்சியம். ஆனால், இவளின் பெற்றோர். இவளது லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக இப்போதில் இருந்தே, அவளை டேபிள் டென்னிஸ் போட்டியின் தீவிர பயிற்சிக்கு உட்படுத்தி வருகின்றனர். அவள் கண்ணீர் மல்க பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் ரத்தக்கண்ணீர் வரவழைக்கிறது.

தடகளம், ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் சீனர்கள் சிறந்து விளங்குவதற்கு அங்கு சிறுவயதில் இருந்தே அளிக்கப்பட்டு வரும் பயிற்சி என்பதை யாராலும் மறுக்க முடியாது. வாரத்திற்கு 5 முதல் 6 செசன் பயிற்சிகளை லீ இயி மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

 


6 வயது பிஞ்சு குழந்தைக்கு இந்த அதிபயங்கர பயிற்சி தேவையா? பெற்றோரின் பணத்தாசையையே, அந்த குழந்தையை இப்படி வாட்டி வதைக்க வைத்துள்ளதாகவும், பிடிக்காமல் தான் அழுதுகொண்டே லீ இயி, இந்த பயிற்சியில் பங்கேற்று வருவதாக இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Six years old chinese girls intense training sessions video viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X