முதலையை புறமுதுகிட்டு ஓட வைத்த சிங்க நாய்குட்டி; வைரல் வீடியோ

நாய்க்குட்டி ஒன்று ஆக்ரோஷமாக குறைத்து முதலையை துறத்தி புறமுதுகிட்டு ஓடச் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தண்ணீரில் யானையை வீழ்த்தும் அளவுக்கு பலம் கொண்ட முதலையை நாய்க்குட்டி ஒன்று ஆக்ரோஷமாக குறைத்து விரட்ட முதலை புறமுதுகிட்டோடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

முதலை நீரில் பலமான விலங்கு என்றால் அதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. முதலைகள் பொதுவாக ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள் வாழ்கின்றன. நீர் நிலைகளில் மறைந்திருக்கும் முதலைகள் அருகே வரும் விலங்குகளை திடீரென தாக்கி கொன்று உணவாக்கிக்கொள்வதில் திறமை மிக்கவை. முதலை நீரில் இருக்கும்போது ஆடு, மாடு, மான், சிறுத்தை, புலி என எந்த விலங்காக இருந்தாலும் முதலையிடம் மண்டியிடத்தான் வேண்டும். அந்த அளவுக்கு முதலை நீரில் பலம் வாயந்த விலங்காக இருக்கிறது.

இந்த சுழ்நிலையில்தான், கரையேறி வந்த முதலை ஒன்றை ஒரு குட்டி நாய்க்குடி ஆக்ரோஷமாக குறைத்து விரட்ட, முதலமை பயந்துகொண்டு நீர்நிலையை நோக்கி புறமுதுகிட்டோடும் விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முதலையை ஒரு நாய்க்குட்டி குறைத்து விரட்டும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமென் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், நீரில் இருந்து வெளியே வந்து கரையில் படுத்திருக்கும் ஒரு சதுப்புநில முதலையைப் பார்க்கிற ஒரு நாய்க்குட்டி, முதலையைப் பார்த்து ஆக்ரோஷமாக குறைக்கிறது. நாய்க்குட்டி குறைப்பதைப் பார்த்து பயந்துபோன முதலை நீர்நிலையை நோக்கி புறமுதுகிட்டு ஓடுகிறது. நாய்க்குட்டியும் முதலையைவிடாமல் துறத்திச் செல்கிறது. முதலை தண்ணீருக்குள் சென்று மறைந்த பிறகு நாய்க்குட்டி திரும்ப வருகிறது.

இந்த வீடியோ குறித்து ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமென் குறிப்பிடுகையில், “தைரியமான ஒரு குட்டி நாய்க்குட்டியால்கூட ஒரு முதலையை விரட்ட முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு பெரிய முதலையை ஒரு குட்டி நாய்க்குட்டி ஆக்ரோஷமாக குறைத்து விரட்டிச் செல்கிற இந்த வீடியோ, எளியவர்களாக இருந்தாலும் தைரியமாக செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்று தன்னம்பிக்கை அளிப்பதாக நெட்டிசன்கள் நாய்க்குட்டியை சிங்க நாய்க்குட்டி என்று கூறி வருகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Small dog bold barking make a crocodile to turn away video goes viral

Next Story
சென்னை டெஸ்ட்: ஹர்பஜனாக மாறிய ரோகித் சர்மா, வைரல் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com