சோலார் மின்வேலியை, யானை ஒன்று சாமர்த்தியமாக தாண்டி செல்லும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாது பெரும் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.
யானைகள் என்றாலே, அதிக நினைவுத்திறன் கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அது புத்திக்கூர்மையும் கொண்டது என்பது பல நிகழ்வுகளின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும். அத்தகைய ஒரு நிகழ்வுதான் இது. சோலார் மின்வேலியை, சாமர்த்தியமாக ஒரு யானை தாண்டி செல்லும் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காடுகளில், மனிதர்கள் - வனவிலங்குகள் இடையேயான மோதலை தடுக்கவும், அறுவடைக்கு தயாராக உள்ள உணவுப்பயிர்களை யானைகள் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து காக்கவும், மின்வேலிகள் அமைக்கப்படுவது வழக்கம்.
Elephants will go where they want. Solar electric fencing maintained at 5kv was designed to deter them. It’s intelligence makes them cleaver to breach that barrier. Interesting. pic.twitter.com/vbgcGTZfij
— Susanta Nanda IFS (@susantananda3) November 4, 2019
ஒடிசா வனப்பகுதியில் குடியிருப்பு பகுதிகளின் அருகே அமைக்கப்பட்டுள்ள 5 கிலோவாட் மின்சாரம் பாயும் சோலார் மின் வேலிக்கு அருகே யானை வந்து நிற்கிறது. சிறிதுநேரம் அப்படியே நிற்கும் யானை, மின் வயர்கள் இணைக்கப்பட்டுள்ள கம்பத்தை, தன் தும்பிக்கையால் அழுத்தி கீழே சாய்க்கிறது. கம்பம் சாய்ந்ததால், மின்சாரம் பாயும் வயர்கள் தரையில் கிடத்தப்படுகின்றன. பின் மெதுவாக, மின்வயர்களுக்கு இடையே தனது கால்களை வைத்து லாவகமாக யானை அந்த பகுதியை கடந்து செல்கிறது.
இந்த வீடியோவை, ஐஎப்எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட சிலமணிநேரங்களுக்குள்ளாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது.அதேஅளவுக்கு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், தங்களுக்கு தெரிந்த மற்ற விலங்குகளின் புத்திக்கூர்மை, அதை எதிர்கொண்ட விதம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.