இன்று மத்திய அமைச்சர்... அன்று மிஸ் இந்தியா போட்டியாளர்! ஸ்மிரிதி இரானி வீடியோ
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி 21 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்துகொண்ட வீடியோவை தயாரிப்பாளர் பகிர்ந்து நினைவுபடுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Smriti Irani minister of textiles, Minister Smriti Irani, Smriti Irani participated in Miss India, மிஸ் இந்தியா, வைரல் வீடியோ, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பங்கேற்ற மிஸ் இந்தியா போட்டி, ஸ்மிருதி இரானி, viral video, bjp, union minister, miss india, Smriti Irani participated in miss india viral video
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி 21 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்துகொண்ட வீடியோவை தயாரிப்பாளர் பகிர்ந்து நினைவுபடுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சராகவும் உள்ளார் ஸ்மிரிதி இரானி. இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தொலைக்காட்சிகளில் நடித்துள்ளார். மாடலாக இருந்துள்ளார். ஆனால், பலருக்கும் தெரியாத அல்லது அந்த அளவுக்கு அறியப்படாத ஒரு செய்தி தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்மிரிதி இரானி 1998-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றவர் என்பதுதான் அந்த செய்தி.
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி 21 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்ட வீடியோவை தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
ஸ்மிரிதி இரானி மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற வீடியோ குறித்து ஏக்தா கபூர் குறிப்பிடுகையில், “வெற்றியை எளிதாக பெற்றுவிடலாம் என்று நினைபவர்களுக்காக இந்த வீடியோவை பதிவு செய்கிறேன். ஸ்மிரிதி இரானி குடும்ப பெண்ணாக இருந்து தற்போது சக்திவாய்ந்த அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார். ஆரம்பத்தில் சாந்தமான, கூச்ச சுபாவமுள்ள எளிமையான பெண்ணாக இருந்தார். அவரது புன்னகை அனைவரது இதயங்களையும் வென்று விடும்.
சமீபத்தில்கூட அவருடன் பணியாற்றிய சக ஊழியர் ஒருவர் அவரிடம் உதவி கேட்டார். உடனடியாக அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். இன்றும்கூட தன்னுடன் பணியாற்றிய ஒரு பெண்ணின் உறவை மதித்து வருகிறார். அவருடைய திறந்த மனம் அவரை இன்னும் பெருமைப்படுத்துகிறது. உங்களை எண்ணி மிகவும் பெருமை கொள்கிறேன்“என்று குறிபிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news