Smriti Irani’s Instagram post : சமூக வலைதளங்களில் மிகவும் ”ஆக்ட்டிவாக” இருக்கும் மத்திய அமைச்சர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்மிருதி இரானி. அரசியல் பற்றியே எப்போதும் இல்லாமல் பல நேரங்களில் செல்ஃப் ட்ரோலில் ஈடுபடவும் செய்வார். அவர் ஷேர் செய்யும் மீம்களுக்காகவே பலரும் அவரை பின் தொடர்வதும் உண்டு.
“அன்றும், இன்றும்” என்று இரண்டு புகைப்படங்களை இணைத்து சமீபத்தில் இன்ஸ்டகிராமில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார். சிறுவயதில் உர்ர்ர்ரென்று இருக்கும் ஸ்மிருதியும் சமீபத்தில் உர்ர்ரென்று இருக்கும் ஸ்மிருதியும் அந்த புகைப்படத்தில் இருக்க, அதில் சில நேரங்களில் உறவுகளின் நிலைகள் மாறலாம் ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த புகைப்படம் பதிவிடப்பட்டு 4 மணி நேரம் கூட ஆகவில்லை. ஆனால் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் இந்த புகைப்படத்தை லைக்கிட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் இந்த புகைப்படத்திற்கு தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil