ஒரே ஒரு போஸ்ட்... கொடுத்த எல்லா பில்டப் க்ளோஸ்... என்ன ஸ்மிருதி இரானி இப்படி பண்ணிட்டீங்க?

பிரபல பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் திருமணம் ஃபோட்டோ குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலாய்த்துள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவருக்கும் இத்தாலி நாட்டில் நேற்று திருமணம் நடந்தது. இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கியது. பெங்கலூரில் தீபிகா வீட்டில் துவங்கிய கொண்டாட்டம் இத்தாலி வரை தொடர்ந்து நடைபெற்றது.

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணத்தை கலாய்த்த ஸ்மிருதி இரானி

இந்த திருமணத்தை காண்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள இவர்களின் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். பிரபல் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்காவின் திருமணமும் இத்தாலியிலேயே நடைபெற்றது. அவர்களின் சமூக வலைத்தளங்களில் திருமணம் நடைபெறும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வந்ததால் அதையே இவர்களின் திருமணத்திற்கும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், இன்னும் ஒரு புகைப்படம் கூட வெளியிடாத காரணத்தால், தீபிகா – ரன்வீர் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனை கவனித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீப்வீர் திருமணத்தை கலாய்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

#when you have waited for #deepveer #wedding #pics for too longgggg ????‍♀

A post shared by Smriti Irani (@smritiiraniofficial) on

அந்த பதிவில், ஒரு பார்க் நாற்காலி மீது எதற்காகவோ ஒரு எலும்புக் கூடு காத்திருப்பது போல் இருக்கும் புகைப்படத்தநி பகிர்ந்து, “தீப்வீர் திருமண புகைப்படங்களுக்காக காத்திருந்தால்…” என்று பதிவிட்டிருந்தார். ரசிகர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த போஸ்ட் இருப்பதாலோ என்னவோ பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close