New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/king-cobra.png)
ராஜநாகத்திடம் இருந்து நூலிழையில் ஒருவர் உயிர் தப்பியுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனாலும் பாம்பு பிடிக்கும் கலை தெரிந்தவர்கள் கொடிய விஷம் உள்ள பாம்பாக இருந்தாலும் அசால்டாக பிடிப்பார்கள். பாம்பு பிடிக்கும்போது சில உயிரிழப்புகளும் ஏற்பட்டதுண்டு. கொஞ்சம் சுதாரிப்பாக இல்லையென்றாலும் உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும் அபாயகரமான உயிரினம் பாம்பு. சில சமயங்களில் எப்படிப்பட்ட அனுபவம் வாய்ந்த பாம்பு பிடிப்பவர்களும் பாம்பு கடியில் சிக்கி மரணமடைந்த செய்திகளையும் நாம் கேட்டிருப்போம்.
மற்ற பாம்புகளை விட ராஜநாகம் கொடிய விஷம் கொண்டது. இந்த வகை பாம்பு கடித்த உடன் ரத்தம் உறைந்து கடிப்பட்டவர்கள் நொடியில் மரணத்தை சந்திப்பார்கள். அப்படிப்பட்ட ராஜநாகத்திடம் இருந்து நூலிழையில் ஒருவர் உயிர் தப்பியுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில், வீட்டின் குளியலறை ஒன்றில் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அதனை பிடிக்க சென்ற நபர் சிறிய நாகம் என்று நினைத்து அதன் வாலை பிடித்து இழுத்துள்ளார். அப்போது 14 அடி உயர ராஜநாகம் வெளியே வந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர் அதிர்ச்சியில் திகைத்து போனார்.
பயத்தில் அவர் கையில் வைத்திருந்த குச்சியை தூக்கி எரியும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. சற்று அவர் தாமதித்து நகராமல் இருந்திருந்தால் நாஜநாகத்தின் கொடிய விஷத்திற்கு ஆளாகி இருப்பார்.
How not to rescue a snake. Especially if it’s a king cobra. Via @judedavid21 pic.twitter.com/yDJ5bLevQf
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) September 7, 2021
இந்த வீடியோவை வனவிலங்குகள் பற்றி அதிக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஐஃஎப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பாம்பை பிடிப்பதற்கு முன் இருமுறை யோசியுங்கள். அதுவும் குறிப்பாக நாஜநாகத்தை பிடிக்கும் போது என்றுள்ளார். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.