நாய்க் குட்டியை சுற்றி வளைத்த பாம்பு… களமிறங்கிய சகோதரர்கள்; பதற வைக்கும் வைரல் வீடியோ

இந்த வீடியோவைப் பார்க்க்கும் எவரும் நாய்க்குட்டிகளின் சகோதர பாசத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. சும்மாவா சொன்னார்கள், தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று. இந்த வீடியோவைப் பார்க்கும் எவரும் நாய்க்குட்டிகளை பாராட்டவே செய்வார்கள்.

author-image
WebDesk
New Update
நாய்க் குட்டியை சுற்றி வளைத்த பாம்பு… களமிறங்கிய சகோதரர்கள்; பதற வைக்கும் வைரல் வீடியோ

Viral video: ஒரு நாய்க்குட்டியை பாம்பு ஒன்று சுற்றி வளைத்துக் கொல்ல முயற்சி செய்வதைப் பார்த்த, அதன் சகோதர நாய்க்குட்டிகள் களம் இறங்கி மீட்கப் போராடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஒரு மனிதனை யாராவது கொலைவெறியோடு தாக்குக்கிறார்கள் என்றால் அதைப் பார்க்கும் மற்றவர்கள் நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கிச் செல்வார்கள். அல்லது வேடிக்கைப் பார்ப்பார்கள். ஆனால், விலங்குகள் அப்படி இல்லை, தனது இனத்தில் ஒருவருக்கு ஆபத்து என்றால் சும்மா விடமாட்டோம் என்று கூறும் விதமாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ எப்போது, எங்கே பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை. பார்ப்பவர்களை பதறவைத்து பிரமிக்கச் செய்கிறது. ஒரு பாம்பு ஒரு நாய்க்குடியை சுற்றி வளைத்து கொல்ல முயற்சி செய்கிறது. இதைப் பார்த்த அருகே இருந்த சகோதர நாய்க்குட்டிகள் களமிறங்கி போராடி மீட்கிறது. கொடிய பாம்பு உடனான இந்த நாய்க்குட்டிகளின் போராட்டம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடையச் செய்கிறது.

Advertisment
Advertisements

இந்த வீடியோவைப் பார்க்க்கும் எவரும் நாய்க்குட்டிகளின் சகோதர பாசத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. சும்மாவா சொன்னார்கள், தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று. இந்த வீடியோவைப் பார்க்கும் எவரும் நாய்க்குட்டிகளை பாராட்டவே செய்வார்கள்.

இந்த வீடியோ 2013-ம் ஆண்டு லாலி கேமிங் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஒரு நாய்க்குட்டியை ஒரு பாம்பு சுற்றி வளைத்து தாக்குக்கிறது. இதைப் பார்த்த அருகே இருந்த அதன் 2 சகோதர நாய்க்குட்டிகள் தங்கள் சகோதரனை மீட்க வேண்டும் என்று போராடுகின்றன. பாம்பின் பிடியில் நாய்க்குட்டி சிக்கி மூச்சு திணற உயிருக்காகப் போராடுகிறது. விரைந்து செயல்படும் 2 நாய்க்குட்டிகள் பாம்பின் தலைப் பகுதியை வாயில் கவ்வி இழுக்கின்றன. ஆனால், அந்த பாம்பு நாய்க்குட்டியை சுற்றி வளைத்துக்கொண்டு மேலும் இறுக்கிறது. பாம்பின்பிடியில் நாய்க்குட்டி இறந்துவிடுமோ என்று பார்ப்பவர்களைப் பதறச் செய்கிறது. போராடும் நாய்க்குட்டிகள் சோர்ந்துவிடுமோ என்று கவலை கொள்ளச் செய்கிறது. ஒரு பெரிய நாய் சுற்றி சுற்றி வருகிறது. ஆனால், அதனால் எதையும் செய்ய முடியவில்லை. ஆனால், விடாமல் போராடும் நாய்க்குட்டிகள் அந்த பாம்பை வாயால் கடித்து பலமாக இழுக்கின்றன. எப்படியோ ஒருவழியாக அந்த பாம்பு நாய்க்குட்டியை விட்டுவிடுகிறது. பிறகு, அந்த நாய்க்குட்டியும் எழுந்து தனது சகோதர நாய்க்குட்டிகளோடு சேர்ந்து பாம்பை கடித்து பதிலடி கொடுக்கின்றன.

பாம்பு பிடியில் சிக்கிய நாய்க்குட்டியை அதன் சகோதர நாய்க்குட்டிகள் களமிறங்கி போராடி மீட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: