தாய்லாந்தில் கார் ஷோரூம் ஒன்றில் எதிர்பாராவிதமாக ஒரு பாம்பு நுழைந்துவிட அங்கே இருக்கிற ஊழியர்கள் எப்படி பயந்து பதற்றத்துடன் அந்த பாம்பை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள் என்பது ஒரு த்ரில்லர் குறும்படம் போல வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்கள் செல்வாக்கு செலுத்து காலத்தில் ஒவ்வொரு நாளும் பல வீடியோக்கள் உலக அளவில் வைரலாகி பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அதில் சில வீடியோக்கள் ஒரு த்ரில்லர் குறும்படம் போல பார்ப்பவர்களையும் திகில் அடையச் செய்யும் விதமாக இருக்கும். அப்படி, தாய்லாந்தில் ஒரு கார் ஷோ ரூமில் திடீரென எப்படியோ ஒரு பாம்பு நுழைந்துவிடுகிறது. அப்போது அங்கே இருந்த ஊழியர்கள் பாம்பை பார்த்து அச்சத்துடன் அதை வெளியே விரட்டுகிறார்கள் அப்போது நடக்கும் சம்பவங்கள் வீடியோவைப் பார்ப்பவர்களை திகிலடைய வைக்கிறது.
அந்த வீடியோவில், தாய்லாந்தில் மிகவும் வழவழப்பாக உள்ள ஒரு கார் ஷோரூமுக்குள் நுழைந்த பாம்பு வேகமாக வழுக்கிச் செல்கிறது. அந்த பாம்பைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பயத்துடன் அதை வெளியே விரட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால், அந்த பாம்பு வெளியே செல்லாமல் கார் ஷோ ரூமூக்குளேயே வேகமாக செல்கிறது. அப்போது, கார் ஷோர் ரூமில் இருந்தா Sompong Jaion என்ற சேல்ஸ்மேன் அந்த பாம்பை நாற்காலி ஒன்றைக் கொண்டு வெளியே துரத்த முயற்சிக்கிறார். ஆனால், அந்த பாம்பு நாற்காலியையே பின்னிக்கொள்ள, அவர் பயத்துடன் பின் வாங்குகிறார். அப்போது, அங்கே இருந்த பெண் ஒருவர் மாப் ஸ்டிக் உதவியடன் பாம்பைத் துரத்தும்போது வழுக்கி விழ, பாம்பு அவரை நோக்கித் திரும்புகிறது. அப்போது அங்கே இருப்பவர்கள் அனைவரும் பயத்தில் கூச்சலிடுகிறார்கள். அப்போது வீடியோவைப் பார்ப்பவர்களுக்கும் திகில் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அதே நேரத்தில் சிரிப்பலையையும் ஏற்படுத்துகிறது.
ஒரு வழியாக அந்த பாம்பை மாப் ஸ்டிக் மூலம் கார் ஷோ ரூமுக்கு வெளியே விரட்டுகிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கார் ஷோரூமில் நுழைந்த பாம்பை மாப் ஸ்டிக் உதவியுடன் விரட்ட முயன்ற பெண் வழுக்கி விழும்போது ஒரு த்ரில்லர் படம் போல திகிலாக இருக்கிறது. இந்த வீடியோ உலக அளவில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”