New Update
/
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்புகள் மீதான மனிதர்களின் அச்சம் பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கு பாம்பு கடித்தால் விஷத்தால் மனிதன் இறந்துவிடுவான் என்கிற அச்சம் மட்டும் பாம்புகளின் மீதான பயத்துக்கு காரணமாக இருக்க முடியாது. விஷம் உள்ள பாம்பு என்றாலும் சரி, விஷம் இல்லாத பாம்பு என்றாலும் சரி பாம்பு என்றாலே மனிதர்கள் பயப்படுகிறார்கள். மனிதர்கள் பாம்பைப் பார்த்து பயப்படுவதற்கு அதன் தோற்றம் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். பாம்பு வழவழ என்று நீளமாக இருக்கும் அதன் உடல் அமைப்பு தோற்றம் பார்க்கும்போதே ஒரு அசூயை ஏற்படுத்தலாம்.
வெயில் காலங்களில் பாம்புகள் வெப்பம் தாங்காமல் குளிர்ச்சியான இடங்களைத் தேடி செல்கின்றன. பாம்புகள் வீடுகளுக்குள் செல்வது இயல்பாக நடக்கிறது.
ஓசூர்: சூளகிரி பகுதியில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு
— Sun News (@sunnewstamil) May 24, 2024
பாம்பு பிடிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது#SunNews | #Hosur | #Snake pic.twitter.com/nBJ56SKNSg
ஒசூர், சூளகிரியில் வழக்கறிஞர் அலுவலகத்தில் ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருக்கும்போது, தீடீரென ஒரு சாரைப் பாம்பு அலுவலகத்துக்க்ள் புகுந்தது. இதைப் பார்த்து ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு அலுவலகத்தைவிட்டு வெளியே ஒடியுள்ளனர்.
வழக்கறிஞர் அலுவலகத்துக்குள் பாம்பு புகுந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த ஊழியர்கள் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சூளகிரியில் வழக்கறிஞர் அலுவலகத்தில் சாரைப் பாம்பு புகுந்ததைப் பார்த்த பணியாளர்கள் அலறியடித்துக்கொண்டு அலுவலகத்தில் இருந்து வெளியே ஓடிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.