கோவை உக்கடம் காவல் நிலையத்தில் புகுந்த பாம்பை பிடிக்க போலீசார் அரை மணி நேரம் போராடியும் பிடிக்காமல் தப்பிக்க விட்டு கோட்டை விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த இரண்டு வருடமாக மேம்பால பணி நடைபெற்று வருவதால் உக்கடம் பேருந்து நிலையம், காவல் நிலையம் முழுவதும் தூசி நிறைந்த பகுதியாக உள்ளது. இதனிடையே எப்போதும் பரபரப்பாக பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 5 அடி கொண்ட நல்ல பாம்பு ஒன்று ரோட்டை கடப்பதற்கு முயற்சி செய்துள்ளது. பொதுமக்கள் வாகனங்கள் அதிக அளவில் ரோட்டில் செல்வதால் எங்கு செல்வது என்று தெரியாமல் உக்கடம் காவல் நிலையத்திற்குள் புகுந்து தஞ்சம் அடைந்தது.
உடனடியாக பாம்பை பிடிப்பதற்கு காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் பக்கெட் எடுத்து வந்து பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பாம்பு காவல் நிலையத்தின் சுற்று சுவர் மேல் ஏற முயற்சி செய்தது. தொடர்ந்து அரை மணி நேரமாக பாம்பு பிடிக்கும் முயற்சியில் போலீசார் முயன்றனர். ஆனால் யார் கையிலும் சிக்காமல் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள சாக்கடையில் நுழைந்து தப்பித்துவிட்டது.
உக்கடம் காவல் நிலையத்திற்குள் திடீரென பாம்பு புகுந்ததால் அங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“