போக்குவரத்து மிக்க சாலையில், இரவு நேரத்தில், நடு ரோட்டில் ஆளுயரப் பாம்பு அந்தரத்தில் பறந்து வந்து விழுந்ததைப் பார்த்து அங்கே கூடியிருந்த மக்கள் கூட்டம் சிதறி ஓடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பொதுவாக பாம்புகள் புதர்களிலும் காடுகளிலும் வயல்வெளிகளும் சாதாரணமாக காணப்படும். அதுவே மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் வந்துவிட்டால் பயப்படாதவர்கள் இருக்கவே முடியாது. சிலர் மட்டுமே அதை துணிச்சலாக பிடிக்கிறார்கள்.
அப்படி எல்லோரையும் நடுங்க வைக்கும் பாம்பு மக்கள் கூட்டமும் போக்குவரத்தும் மிக்க ஒரு சாலையில் சாலையின் குறுக்கே மேலே செல்லும் மின் ஒயரில் ஆளுயரப் பாம்பு எப்படியே ஏறிவிட்டது. அதுவும் இரவு நேரத்தில் அந்தரத்தில் கம்பியின் மீது ஊர்ந்து செல்கிறது. இதைப்பார்த்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் அச்சத்துடன் கூட்டமாக கூடிவிட்டார்கள். அங்கே இரண்டு சக்கர வாகனத்தில் வந்து இருந்தவர்கள் எல்லோரும் பாம்பு மேலே விழுந்தால் என்னவாகும் என்று தங்கள் வகனங்களை வந்த வழியே திரும்பி செல்கிறார்கள்.
அதே நேரத்தில், கேபில் மின் ஒயரில் அந்தரத்தில் ஆளுயரப் பாம்பு தொங்குவதை மக்கள் கூட்டம் அச்சம் கலந்து கூச்சல் ஆரவாரத்துடன் பார்த்த்துக்கொண்டிருக்கிறார்கள். திடீரென அந்த பாம்பு கேபிள் மின் ஒயரில் இருந்து நழுவி அந்தரத்தில் இருந்து பறந்து கீழே விழுகிறது. பாம்பு கிழே விழுந்ததும் அங்கே இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு தொலைவாக ஓடுகிறார்கள்.
அதற்கு முன்னதாக, இது போல பாம்பு, அந்தரத்தில் கேபிள் மின் ஒயரில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து அப்பகுதி மக்கள் பாம்பு பிடிப்பதற்கு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து இருந்ததால், விரைவாக செயல்பட்டு பாம்பை பிடித்தனர். இந்த சம்பவம் அங்கே இருந்தவர்களால் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதையடுத்து அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் எங்கே நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.
வாகன போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள சாலையில், இரவு நேரத்தில் அந்தரத்தில், கேபிள் மின் கம்பியில் இருந்த ஆளுயரப் பாம்பு பறந்து வந்து விழுந்ததைப் பார்த்து மக்கள் அலறியடித்து ஓடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"