New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-21.jpg)
snake viral video today
15 வருட வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை
snake viral video today
snake viral video today : அமெரிக்காவில் கொலை பசியில் பாம்பு ஒன்று தனது உடலை தானே விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுக் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொலை பசி என்ற வார்த்தை இணையத்தில் வைரல். கொலை பசியில இருக்கேன்னு என்று அடிக்கடி பயன்படுத்துவார்கள். அதன் உண்மையான அர்த்தம் இன்று பலருக்கும் தெரிந்து விட்டது. அமெரிக்காவில் பாம்பு ஒன்று பசியால் தனது உடலை தானே விழுங்கியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிரண்ட் என்ற சரணாலயத்தில் கிங் ஸ்னேக் என்ற வகைப் பாம்பு ஒன்று பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த பாம்பு பார்ப்பதற்கு வெள்ளை, கருப்பு நிறத்தில் இருக்கும். இதனை நாள்தோறும் தனியக குழு ஒன்று கவனித்துக் கொண்டு வருகிறது. நாள்தோறும் பார்வையாளர்கள் பலரும் இந்த பாம்பினை பார்த்து ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்த பாம்பிற்கு கடும் பசி ஏற்பட்டு தனது வால் பகுதியை தானே சாப்பிட்டுள்ளது.
இதனைப் பார்த்த சரணாலயத்தில் பணியாற்றிய ஊழியர் ஜெஸ்ஸி ரோத்தக்கர் என்பவர், பாம்பின் மூக்கு பகுதியில் லேசாக தட்டிக்கொடுத்து, அது தன் வாயில் விழுங்கிய அதன் வாலை வெளியே எடுத்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோ காட்சியை ரோத்தக்கர் தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “ சாதாரணமாக இந்த வகை பாம்புகள் மற்ற பாம்புகளை வேட்டையாடி உண்பது வழக்கமான ஒன்றுதான். இந்த சரணாலயத்தின் 15 வருட வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.