viral video: சமூக ஊடகங்களின் தினமும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் நெட்டிசன்கள் ஈர்த்த்து வைரலாகி வருகிறது. அதில் பெரும்பாலான வீடியோக்கள் வனவிலங்கு வீடியோக்கள்.
மனிதர்களுக்கும் எப்போதும் வனவிலங்குகள் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. இதற்கு காரணம் காடுகளுக்கு சென்று வனவிலங்குகளை நேரில் காணமுடியாதவர்கள் வீடியோவில் பார்ப்பது என்பது ஆர்வத்தையும் மகிழ்ச்சியையு ஏற்படுத்துகிறது.
அதனால்தான், டிஸ்கவரி, அனிமல் பிளானெட் போன்ற டிவி சேனல்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகின்றன.
அந்த வகையில், பனிப் பிரதேசத்தில் பனிச்சறுக்கல் விளையாடிய ஜோடி பனிச் சிறுத்தைகளின் வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பனிச் சிறுத்தை ஜோடிகளின் வாழ்க்கைக்கான நேரம் என்று பதிவிட்டு ஜோடி பனிச் சிறுத்தைகள் பனிப் பிரதேசத்தில் பனிச் சறுக்கல் விளையாடுகிற வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
ஜோடி பனிச் சிறுத்தைகள் பனிச் சறுக்கல் விளையாடும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், ட்விட்டர் பயனர்கள் தங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஜோடி பனிச் சிறுத்தைகள் பனிச் சறுக்கல் விளையாட்டு வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”