‘மலைகளின் பேய்’ என்று அழைக்கப்படும் அரிய பனிச் சிறுத்தைகள், மலைப் பாதையில் குட்டிகளுடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சில வனவிலங்குகளின் எண்ணிக்கை அரிதாகி வருகின்றன. இதற்கு காரணம் அவற்றின் வாழ்விடங்கள் அழிப்பு, சுற்றுச்சூழல் மாற்றம் ஆகியவற்றால் வனவிலங்குகளின் எண்ணிக்கை அழுத்தத்திற்கு உள்ளாகிறது. அரிய வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் வனத்துறை திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ‘மலைகளின் பேய்’ என்று அழைக்கப்படும் அரிய பனிச் சிறுத்தைகள், மலைப் பாதையில் குட்டிகளுடன் நடந்து செல்லும் வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு மலையின் மேல், மலைப் பாதையில் ஒரு பனிச் சிறுத்தை தனது 2 குட்டிகளுடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Snow leopards, often called “ghosts of the mountains,” embody the untamed wilderness of India’s lofty Himalayan regions. However, their population is under increasing pressure due to habitat degradation, climate change, and human-wildlife conflict. Globally, fewer than 7,000… pic.twitter.com/VzVtoegA00
— Supriya Sahu IAS (@supriyasahuias) October 23, 2024
இந்த வீடியோ குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு குறிப்பிடுகையில், “பனிச்சிறுத்தைகள், பெரும்பாலும் "மலைகளின் பேய்கள்" என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவின் உயரமான இமயமலைப் பகுதிகளின் கட்டுப்பாடற்ற வனப்பகுதியை உள்ளடக்கியது. இருப்பினும், வாழ்விட சீரழிவு, காலநிலை மாற்றம் மற்றும் மனிதர்கள் - வனவிலங்குஜ மோதல்கள் காரணமாக அவைகளின் எண்ணிக்கை அதிக அழுத்தத்தில் உள்ளது. உலக அளவில், 7,000க்கும் குறைவான பனிச்சிறுத்தைகள் இந்தியா உட்பட 12 எல்லை நாடுகளில் இருக்கின்றன. உலகளாவிய பனிச்சிறுத்தை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம் (GSLEP) மற்றும் இந்தியாவின் பனிச்சிறுத்தை திட்டம் இந்த கம்பீரமான உயிரினங்களை வாழ்விடங்களை மீட்டெடுப்பதன் மூலம் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பனிச் சிறுத்தையின் வீடியோ - திறமையானவர்களின் அபூர்வமான வீடியோ பதிவு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோவை தனு பரன் (x/ @dhanu_paran )படம்பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மலையின் மேல் பகுதியில் பனிச் சிறுத்தை குட்டிகளுடன் நடந்து செல்லும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.