இது தேவையா? திருமண மேடையில் மச்சினியிடம் அடிவாங்கிய இளைஞர்!

இப்படி ஷாக்குக்கு மேல் ஷாக் அரங்கேற செய்வதறியாமல் மாப்பிள்ளை  அதிர்ச்சி உறைந்து நிற்கிறார்.

திருமண மேடையில்  தன்னிடம்  தவறாக நடந்துக் கொண்ட அக்கா கணவரை, மணப்பெண் மேடையிலியே அடித்து பாடம் கற்பித்த  வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருமணம் என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்.. தமிழ் கலாச்சார திருமணம் ஒருவகை என்றால், வட இந்திய திருமணங்கள் வேறு வகை. அவர்களின் உடைகள் தொடங்கி சடங்குகள் வரை அனைத்துமே வித்யாசமாகவும் கலர்ஃபுல்லாகவும் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு வட இந்திய திருமணத்தில் அரங்கேறிய இந்த துர்சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை  பார்ப்பவர்களுக்கு முதலில் வருவது சிரிப்பு. அதன் பின்பு வரும் கேள்வி  ஏன்? என்ன நடந்தது? என்பது தான்.  அதற்கான பதில் தான் இந்த செய்தி.

ஆசை ஆசையாக  திருமண மேடை ஏறிய மணப்பெண், தனது கணவனுக்கு மாலை போட காத்திருக்கிறாள். வழக்கம் போல் மணமக்களின் நண்பர்கள் கொண்டாட்டம், சர்பிரைஸ் என்ற பெயரில் மேடை ஏறி  மணமகனை தூக்கி ”இப்போது மாலை மாற்றுங்கள் பார்க்கலாம் ”என்று மணமகளை வம்பு இழுக்கின்றனர்.  அப்போது என்ன செய்வது? என்று யோசிக்கும்  மணப்பெண்ணை “நான் தான் இருக்கேன்லா” என்ற தோனியில் அசால்ட்டாக தொட்டு  தூக்குகிறார்  அவரின் அக்கா கணவர்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத மணப்பெண் சிரித்துக் கொண்டே மாப்பிள்ளைக்கு மாலை அணிவித்துவிட்டு திரும்பி, கல்யாணத்திற்கு வந்த ஒட்டுமொத்த பேருக்கும், (மாப்பிள்ளை ) உட்பட ஷாக் கொடுக்கும் வகையில்,  ஓங்கி கன்னத்தில் பளார் விடுகிறார்.

இந்த அடி யாருக்கும் தெரியுமா? மேடையில்  அனுமதியின்றி தன்னை தூக்கிய அக்காவின் கணவருக்கு. மேடையில் மச்சினை தூக்கிய அந்த நபர், அவரின் தவறாக நடந்துக் கொண்டுள்ளார். இதை சற்றும் பொறுத்துக் கொள்ளாத அந்த பெண் அவரை மேடையிலியே வைத்து அடித்து பாடம் கற்பித்துள்ளார்.

ஒரு நிமிடம் உலகமே நின்றது போல்  கல்யாணத்திற்கு வந்த அனைவரும் திகைத்து நின்றுள்ளனர். அப்போது பெண்ணின் அக்கா, தனது கணவனிடம் என்ன நடந்தது என்ன கேட்க? அடுத்த அடி அவரின் கன்னத்தில் விழுந்தது. அவரை அடித்தவர் அவரின் கணவர். இப்படி ஷாக்குக்கு மேல் ஷாக் அரங்கேற செய்வதறியாமல் மாப்பிள்ளை  அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.

கடந்த இரண்டு நாட்களாக இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அக்காவின் கணவர், தன்னுடைய திருமணம் என எதையும் பொருட்படுத்தாமல் அந்த நபருக்கு பாடம் கற்பித்த மணப்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

×Close
×Close