கமல் பூவா?? விதையா??.... நெட்டிசன்களின் கலாய் மீம்ஸ்கள்!

ஒரு பக்கம் கமலின் அரசியல் பயணம். மறுபக்கம் நெட்டிசன்களின் கலாய் மீம்ஸ்கள் என சோஷியல் மீடியாஸ் மீம்ஸ்களால் குவிந்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசன்,   இன்று மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், சின்னம், கொள்கை குறித்த  முழு விபரத்தையும் அறிவிக்கிறார்.  ராமேஸ்வரத்தில் காலை துவங்கிய கமலின் பயணம் இரவு வரை தொடர்கிறது. உலகநாயகனின் இந்த அரசியல் நகர்வு இன்று தொலைக்காட்சிகள் மற்றும்  பத்திரிக்கையில் பரப்பரப்பு செய்தியாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் மீம்ஸ் மன்னர்களும் கமலின் அரசியல் பயணத்தை  சமூக வலைத்தளங்களில் தீயாக கலாய்த்து வருகின்றன.  குறிப்பாக கமலின் ட்வீட், பேச்சு, மீட்டிங் என எதையுமே விட்டு வைக்கவில்லை.  சமீபத்தில் கமல் மற்றும் ரஜினியை திமுக செயல்தலைவர் மு. க ஸ்டாலின் காகித பூக்கள் என்று விமர்சித்திருந்தார். அதற்கு கமல் பூ அல்ல விதை என்று சுவாரசியமான பதிலை அளித்திருந்தார்.

இந்த விவாதம் தான் நெட்சன்களின் ஹாடஸ்ட் டாப்பிங். இதை வைத்துக் கொண்டு அவர்கள் போடும் மீம்ஸ்களுக்கு அளவே இல்லை.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close