ஹெச் ராஜா கூறிய சீரியஸ் வருத்ததையும், மீம்ஸ்களால் காமெடியாக்கிய நெட்டிசன்கள்!

ஹெச். ராஜாவின் கருத்தும், வருத்தமும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்திருந்த ஹெச். ராஜா, முகநூலில் வருத்தம் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் விரைவில் பெரியார் சிலை அகற்றப்படும் என்ற பதிவை, என் அட்மின் தான் போட்டிருந்தார் என்றும், ஹெச் ராஜா புதிய விளக்கம் அளித்திருந்தார்.

ஆனாலும், ஹெச், ராஜாவின் இந்த சீரியஸ் வருத்ததை, நெட்டிசன்கள் காமெடியாக்கி விட்டனர். எப்போதுமே ஹெச் ராஜாவிற்கு, நெட்டிசன்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்படும். ’சர்ச்சை நாயகன்’ என்று நெட்டிசன்களால் அன்போடு அழைக்கப்படும் ஹெச். ராஜாவின் எந்த ஒரு பதிவிற்கும், கருத்திற்கும் நெட்டிசன்கள் உடனடியாக எதிர் வினையை காட்ட துவங்கி விடுவார்கள்.

 

மீம்ஸ்கள், வீடியோக்கள் என அந்த வாரம் முழுவதும் ஹெச். ராஜா தான் இணையத்தின் சென்ஷேனாக இருப்பார். அந்த வகையில், பெரியார் சிலைக் குறித்து ஹெச். ராஜாவின் கருத்தும், வருத்தமும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இணையத்தைக் கலக்கிக் கொண்டுடிருக்கும் சில பதிவுகள் உங்களுக்காக…

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close