இன்றைய இளம் காதலர்கள் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்! 72 வயதில் காதலில் உருகும் தம்பதி

இருவரும் கண்டிப்பாக சிறந்த காதலர்களுக்கான எடுத்துக்காட்டு தான்.

இருவரும் கண்டிப்பாக சிறந்த காதலர்களுக்கான எடுத்துக்காட்டு தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
social media viral

social media viral

social media viral : காதல்.. இன்றைய இளம் தலைமுறையினருக்கு இதுக் குறித்த அறிமுகமே வேண்டாம். கண்டதும் காதல், காணாத காதல், முதல் காதல், நட்பு காதல், லிவ்விங் டூ கெதர், முறைப்பெண் காதல், குடும்ப உறவு காதல், பள்ளி காதல், ஃபேஸ்புக் காதல் என இந்த 2000கிட்ஸ் உலகத்தில் ஏகப்பட்ட காதல்களை பார்க்க முடிகிறது.

Advertisment

இவை எல்லாமே உண்மையான காதலா? என்றால் அதற்கு பதில் கூற முடியாது. காரணம் காதல் சொல்லி காட்டுவதில் இல்லை வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கிறது. 3 மாதத்தில் காதல், 6 மாதத்தில் திருமணம் 9 ஆவது மாதம் விவாகரத்து என பயங்கர வேகமாக செல்லும் இந்த காதல் உலகத்தில் 72 வயதில் 18 வயது காதலர்களை போல் நம்மை நெகிழ வைக்கின்றனர் லியோனோ - ஷிர்லி தம்பதியினர்.

publive-image

இந்த தம்பதியினர் சமீபத்தில் தங்களது 72 ஆவது ஆண்டு திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டாடினர். இருவரும் திருமண ஜோடிகள் போல் உடை அணிந்துக் கொண்டு ஃபோட்டோ சூட் எடுத்தனர். அந்த வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி நம்மை நெகிழ வைத்துள்ளது. பார்ப்பதற்கே உற்சாகம் தரும் இந்த படங்கள் மற்றும் இவர்கள் இருவரும் கண்டிப்பாக சிறந்த காதலர்களுக்கான எடுத்துக்காட்டு தான்.

Advertisment
Advertisements

இந்த ஸ்பெஷல் நாளில் ஒருவருக்கொருவர் சிறப்பு பரிசுகளையும் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர். அதுமட்டுமில்லை அடுத்த வருட திருமண நாளை இதை விட சூப்பராக கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளனர்.

publive-image

இந்த புகைப்படங்களும் இவர்களின் காதலும்  நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: