New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-72.jpg)
social media viral video today
இப்படியொரு ஐடியாவை அவருக்குயார் கொடுத்தாங்க?
social media viral video today
social media viral video today : கரப்பான் பூச்சியை விரட்ட வீட்டையே நாசமாக்கிய அதிபுத்திசாலி கணவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்போது நாம் வருத்தப்பட வேண்டியது அவரின் மனைவிக்காக தான் பாவம். இப்படியொரு அதிபுத்திசாலி கணவரிடம் சிக்கிக் கொண்டு என்ன பாடு படுகிறாரோ? பிரேசிலில் அரங்கேறிய இந்த சம்பவம் குறித்த வீடியோ ட்விட்டரில் ஹிட் அடித்துள்ளது.
அதுமட்டுமில்லை இதுவரை இந்த வீடியோவை மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். சிரித்துள்ளனர். இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நபரின் வீட்டில் கரையான தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகமாகியுள்ளது. இதனால் வெறுப்பான மனைவி தனது கணவரிடம் இதுப்பற்றி கூறி கரையான கூட்டத்தை உடனே ஒழிக்க வழிசெய்யுமாறு கூறியிருக்கிறார்.
இதனால் களத்தில் இறங்கிய அவரின் கணவர், தோட்டத்தில் குழிக்குள் பதுங்கியிருக்கும் கரையான கூட்டத்தை பெட்ரோல் ஊத்தி எரிக்க முடிவு செய்கிறார். அதன்படி, குழிக்குள் பெட்ரோலை ஊற்றி விட்டு 2 முறை அதில் தீயை கொளுத்தி போடுகிறார். அது ஃபெயிலர் ஆக, மூன்றாவது முறை போட ஒரேடியாக வீடே வெடித்து சிதறுகிறது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அவரும் உறைந்து நிற்கிறார்.
Dude went to the Yosemite Sam school of how to deal with critters. pic.twitter.com/40ElxsFPem
— Klara Sjöberg (@klara_sjo) October 20, 2019
இப்படியொரு ஐடியாவை அவருக்கு யார் கொடுத்தாங்க? என்பது மட்டும் தெரியவில்லை. இந்த காட்சிகள் அனைத்தும் அவரது வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.