social media viral video : பெங்களூருவில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை பற்றி பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஓவியர் ஒருவர் எடுத்த முயற்சி ஒட்டு மொத்த நெட்டிசன்களின் கவனத்தை பெற்றது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
நம்ம இந்தியர் செய்த இந்த செயல் இப்போது மெக்சிக்கோ வரை பரவியிருக்கிறது. கடந்த வாரம் பாதல் நஞ்சுண்டசுவாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் விண்வெளி வீரர் போன்ற உடை அணிந்து கொண்டு, நிலவில் நடப்பதை போன்று காட்சிகள் இருந்தன. ஆனால் அது உண்மையில் நிலவும் இல்லை. நடந்தவர் விண்வெளி வீரரும் இல்லை.பெங்களூருவின் யஷ்வந்த்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஹீரோஹலி, துங்கநகர், விஷ்வனீதம் போன்ற பல பகுதிகளில் உள்ள சாலைகள் தான் அவை.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்துள்ள இந்தச் சாலையை எந்த அரசு அதிகாரிகளும் வந்து ஆய்வு செய்யவும் இல்லை, அதனைச் சீரமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. இதனை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பாதல் நஞ்சுண்டசுவாமி தனது குழுவினருடன் சேர்ந்து எடுத்த முயற்சி தான் அந்த வீடியோ.
குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைக்க ஓவியர் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் வகையில் மாநகர அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்தனர்.இந்த நிலையில், பாதல் நஞ்சுண்டசுவாமியின் வீடியோ வைரலானதால் மெக்சிகோவைச் சேர்ந்த நபர் ஒருவர் தானும் இதேபோல் வீடியோ எடுத்து வெளியிடலாமா எனக் கேட்டு, மெக்சிகோவில் பள்ளமாக உள்ள சாலையை சீர் செய்ய வலியுறுத்தி விண்வெளி வீரர் உடையை அணிந்து சென்று வீடியோ எடுத்துள்ளார்.
make in india, knowledge export– everything happening at same time. https://t.co/SrwF0F2xgc
— Soumya Chatterjee (@Csoumya21) September 11, 2019
இந்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓவியர் பாதல் ஷேர் செய்துள்ளார். தற்போது இதுவும் வைரலாகி வருகிறது. மேலும், ஓவியரின் முயற்சிக்கு பலரும் பாராட்டும், வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.