New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/Lion.jpg)
Social Media viral videos trending lion chasing tourists
ஒரு வழியாக சிங்கத்தை விட அதி வேகத்தில் ஜீப் முன்னேறி செல்ல, துரத்தி வந்த சிங்கம் களைப்படைந்து அங்கேயே நின்றுவிட்டது
Social Media viral videos trending lion chasing tourists
Social Media viral videos trending lion chasing tourists : கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது அடல் பிகாரி வாஜ்பாய் உயிரியல் பூங்கா. இங்கு அதிக அளவில் புலிகள் மற்றும் சிங்கங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டு, இங்கு வாழும் வன உயிரினங்களை பார்வையிடுவதற்காக சஃபாரி ஒன்று துவங்கப்பட்டது. ஜீப்பில் சென்று சிங்கம், புலி, மற்றும் இதர காட்டு விலங்குகளை கண்டு வருவது இயற்கை ஆர்வலர்களுக்கு சிறந்த பொழுது போக்காக அமைந்தது.
இவ்வாறு இன்பச் சுற்றுலா சென்ற பயணிகளுக்கு மரண பயத்தை காட்டி திருப்பி அனுப்பியுள்ளது ஆண் சிங்கம் ஒன்று. இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் ஒரு ஆண் சிங்கம், ஜீப்பில் இருக்கும் பயணிகளை பார்த்தவாறு விரட்டிக் கொண்டு வருகிறது. அதனை பார்த்த பயணிகளுக்கு சிறிது நேரம் உயிரே இல்லை. சிங்கம் வேகமாக வர, அதே வேகத்தில் ஜீப்பை ஓட்டிச் சென்றார் அவ்வண்டியின் ஓட்டுநர். துரத்திக் கொண்டே வரும் சிங்கம் இப்போது நெருங்கிவிடுமோ இல்லை இன்னும் சில நொடிகளில் நெருங்கிவிடுமோ என்ற மரண பயம் அனைவரின் குரல்களிலும்.
ஒரு வழியாக சிங்கத்தை விட அதி வேகத்தில் ஜீப் முன்னேறி செல்ல, துரத்தி வந்த சிங்கம் களைப்படைந்து அங்கேயே நின்றுவிட்டது. பின்பு தான் சஃபாரி சென்றவர்களுக்கு மூச்சே விட நேரம் கிடைத்தது. தற்போது இந்த வீடியோ சமூக வளைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க : சத்தியமா இது வரிக்குதிரை தாங்க… வனவியல் புகைப்படக் கலைஞர்களை வசீகரிக்கும் டிரா…
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.