New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Trending-card-9.jpg)
இதுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்தால், நேற்று யோகா செய்து, புகைப்படம் போட்டவர்கள் எல்லாம் ஒரு ஓரத்தில் தான் அமர்ந்திருக்க வேண்டும்.
21ம் தேதி அன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பலரும் தங்களுக்கு பிடித்தமான யோகாசனங்களை செய்து அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். ஒருசிலர் இருக்கின்றோம், இருந்த இடத்தை விட்டு நகராமல் போனில் நோட்டிஃபிகேஷகன்கள் மற்றும் அப்டேஷன்களை பார்த்து, யோகா செய்பவர்களை பார்த்து பெருமூச்சு விட்டவாறு. அது சரி நாம எங்குட்டு அதெல்லாம் செஞ்சுகிட்டு என்ற ரீதியில் நினைத்திருந்தால் நீங்களும் என் இனமே.
இது ஏனோ உங்களுக்கு மட்டுமே ஏற்பட்ட பிரச்சனை என்று நினைத்துவிட வேண்டாம். எம்.பி. சசி தரூருக்கும் இப்படி இருப்பது தான் பிடிக்குமாம். அதற்கு அவர் பெயர் ஒன்றையும் வைத்திருக்கிறார் “ஸோஃபாசனா”... இருந்த இடத்தை விட்டு துளி கூட நகராமல் வாழும் கலைக்கு இது தான் பெயர்.
This one speaks for me! https://t.co/xWnr4LHFqw pic.twitter.com/8P8wXKjlAd
— Shashi Tharoor (@ShashiTharoor) June 21, 2021
இதுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்தால், நேற்று யோகா செய்து, புகைப்படம் போட்டவர்கள் எல்லாம் ஒரு ஓரத்தில் தான் அமர்ந்திருக்க வேண்டும். ஏன் என்றால் “பேசிக்கலி, சோம்பேறிஸ் ஆர் ஆல் ஓவர் தி வேர்ல்ட், யு நோ”... கிட்டத்தட்ட 3000-க்கும் மேற்பட்டோர் இந்த ட்வீட்டை லைக் செய்து தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
It is my favorite Yogaasana
— RESHMA R✨✨✨✨ (@RESHMAR18955799) June 21, 2021
hehe... same for most of us sir
— Mihir (@mihir_sharma05) June 21, 2021
That's literally me 😂
— Cubbi_Bear (@CubbiBear2) June 21, 2021
யோகா செஞ்சு சிக்ஸ் பேக் காட்டுனவங்க எல்லாரும் கோவப்பட வேண்டாம்... விடுங்க... மக்களே உங்களுக்கு பிடித்த ஆசனம் என்ன என்று எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.