கொரோனா தொற்றின் காரணமாக பல தரப்பினர் சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். போதுமான அலுவலக வசதிகள் இல்லாத காரணத்தால் வீட்டில் அனைவரையும் அமைதியாக இருக்க வைத்துவிட்டு பிறகு நாம் ஆன்லைன் மீட்டிங்கில் பேச வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இது நமக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. உலக அளவிலான பிரச்சனையாக இருந்து வருகிறது.
லைவ் செய்திகளில் இப்படி குறுக்கீடுகள் வரும்போது என்ன செய்வது என்று அறியாமல் திணறும் சூழலும் நிலவத்தான் செய்கிறது. ஜெர்மன் மார்ஷல் ஃபண்ட் மூத்த அதிகாரி ப்ளூம்பெர்க் செய்திகளுக்கு அளித்த பேட்டி ஒன்றின் குறுக்கே அவருடைய மகன் வரும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
பந்தெஸ்வங்கியின் தலைவர் ஜென்ஸ் வெய்ட்மான் தன்னுடைய பதவியில் இருந்து விலகியது குறித்து மிகவும் தீவிரமாக அவர் பேசி வந்த போது இடையில் குறுக்கிட்ட அவருடைய மகன், அவருக்கு பின்னால் நின்று கொண்டு அவரை போலவே சைகை காட்டவும், ஆடவும், இங்கும் அங்குமாக ஓடவும் செய்து கொண்டிருந்தார். தன்னுடைய அப்பாவின் முழுமையான கவனத்தை பெற அந்த சிறுவன் எவ்வளவோ முயற்சி செய்த போதும் அவர் அந்த நேரலையை முடித்துவிட்டார்.
இந்த இறுக்கமான சூழலை தளர்த்தும் வகையில் செய்தி வாசிப்பாளர் ஜோனதன் ஃபெர்ரோ, க்ரீக் அரசுக்காக உங்களின் மகன் வேலை செய்கிறாரா என்ற போது சிரிப்பலைகள் பரவியடு. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil