வரவிருக்கும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை பாஜக தலைமை சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த லிஸ்டில் இடம் பெற்றிருந்த சோனாலி போகாட் என்ற பெயர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 40 வயதான இந்த சோனாலி போகாட் பிரபலமான வீடியோ பகிர்வு செயலியான டிக் டாக்கில் 1.4 லட்சம் பின்தொடர்பவர்களையும், 6.5 லட்சம் ‘லைக்குகளையும்’ சம்பாதித்து வைத்திருக்கிறார்.
தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் பிரிவின் துணைத் தலைவராகவும், ஹரியானா கலா பரிஷத்தின் ஹிசார் மண்டல இயக்குநராகவும் இருக்கும் இவரை போகாட் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூர் தொகுதியில் இருந்து களமிறக்குகின்றனர்.
முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் பஜன் லாலின் மகனாகிய குல்தீப்பை எதிர்த்து போட்டியிடயுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களிலும் பணியாற்றியுள்ளார்.
பாஜக தரப்பில் களமிறக்கிய பின்னரே அவரது டிக் டாக் புகழ் அதிகரித்ததாக சோனாலி போகாட்டின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன் .
சோனாலி போகாட்டின் சில வைரலான சில டிக் டாக் வீடியோக்கள் இங்கே