New Update
/indian-express-tamil/media/media_files/LefI5oXTgGPpCwBV6wUr.jpg)
Sonia Gandhi pet dog Noorie
Sonia Gandhi pet dog Noorie
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் தனது தாயும், கட்சியின் தலைவருமான சோனியா காந்திக்கு பிடித்த குழந்தை யார் என்பதை பகிர்ந்துள்ளார்.
ஆனால் அது அவரும் அல்ல அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவும் அல்ல, அவர்களின் செல்ல நாய் நூரி.
’அம்மாவோட ஃபேவரைட் யார்? சந்தேகமே வேண்டாம். நூரி தான்’
சோனியா காந்தி, செல்ல நாயை முதுகில் சுமந்து செல்வது போன்ற அழகான புகைப்படங்களை ராகுல் தன் இன்ஸ்டாவில் பகிர்ந்த உடனேயே, அது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து விட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், வடக்கு கோவாவில் உள்ள மபுசாவில் உள்ள நாய் பண்ணையில், மூன்று மாதங்களே ஆன இரண்டு ஜாக் ரஸ்ஸல் டெரியர் (Jack Russell Terrier) நாய்க்குட்டிகளை வாங்கினார். அதில் ஒரு நாய்குட்டியை ராகுல், தனது தாய் சோனியா காந்திக்கு சர்பிரைஸாக பரிசளித்தார்.
How adorable is this 😍
— Ruchira Chaturvedi (@RuchiraC) October 4, 2023
Cutest little surprise for Sonia ji pic.twitter.com/mFRS5t22Fa
இதேபோல் மே மாதம், ராகுல் காந்தி தனது மற்ற செல்ல நாயான யாசாவின் மனதைக் கவரும் வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.
அதில், யாசா கடுமையான இரைப்பை நோய்த்தொற்றுக்கு ஆளானதையும், அதற்கு அன்பையும் ஆதரவையும் அனுப்புமாறு மக்களிடம் ராகுல் கேட்டுக் கொண்டார்.
Read in English: Rahul Gandhi drops adorable photos of Sonia Gandhi and pet dog Noorie: ‘Mum’s favourite’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.