பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்க்க ஆசைப்படுபவர்கள் நாய், பூணை, எலி, முயல் என வளர்க்கத்தான் ஆசைப்படுவார்கள். வித்தியாசமாக சிங்கம் வளர்க்க ஆசைப்பட்ட தென்னாப்பிரிக்கா விலங்கியல் மருத்துவர் டீன் சிங்கத்தை மகனைப் போல வளர்த்ததோடு அதனைக் கட்டிப் பிடித்து தூக்கி விளையாடுகிறார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பலரும் செல்லப் பிராணிகள் வளர்க்க ஆசைப்படுவார்கள். அவர்கள் பெரும்பாலும் நாய்க்குட்டி, பூனைக்குட்டி, எலி, முயல் என வளர்ப்பார்கள். அவற்றை தங்கள் வீடுகளுக்குள் ஒரு குடும்ப உறுப்பினரைப் போல கருதி வளர்ப்பார்கள். ஆனால், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த விலங்கியல் மருத்துவர் டீன் ஷ்னீடர் என்பவர் ஒரு சிங்கத்தை வளர்க்க ஆசைப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும், அர்ப்பணிப்புடன் விலங்குகளை காப்பாற்றுவதற்கும், பராமரிப்பதற்கும் இட ஒதுக்கீட்டில் ஒரு சிங்கத்தை வாங்கி வளர்த்தார்.
டீன் ஷ்னீடர் சிங்கத்தை வாங்கி அதை கூண்டில் அடைத்து வளர்க்காமல் தனது மகனைப் போல ஒரு நாய்குட்டி வளர்ப்பதைப் போல வளர்த்துள்ளார். சிங்கத்தை முதலில் சிறிய குட்டியாக வாங்கி வந்த டீன், அதை பெரிய சிங்கமாக வளர்த்துள்ளார். அந்த சிங்கத்தை கட்டிப்பிடித்து தூக்கி விளையாடுகிறார். அதனை குளிப்பாட்டி கட்டி அணைத்து தூக்கு சுற்றி விளையாடுகிறார்.
தான் சிங்கம் வளர்ப்பதையும் சிங்கத்துடன் விளையாடுவதையும் டீன் ஷ்னீடர் வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டார். வீடியோவில் பாய்ந்துவரும் சிங்கத்தை டீன் ஷ்னீடர் ஹலோ மை சன் என்று கட்டிப் பிடித்து தூக்கி விளையாடுவதையும் அது படிப்படியாக வளர்ந்து பெரிய சிங்கமான பிறகும் அப்படியே தூக்கி விளையாடுவதையும் பார்த்து வியந்த நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்ததால் அந்த வீடியோ வைரலானது.
அந்த வீடியோவைப் பற்றி டீன் ஷ்னீடர் கூறுகையில், “2-3 ஆண்டுகளுக்கு முன்பு எனது கனவையும் பணிகளையும் பற்றி சொல்லும்போது முதலில் சிரித்தார்கள். பின்னர் சந்தேகப்பட்டார்கள். பிறகு வெறுத்தார்கள். இப்போது அவர்கள் என்னால் கவரப்படுகிறார்கள்.
மக்கள் எப்போதும் உன்னை சந்தேகிப்பார்கள். உங்களது கனவையும் லட்சியத்தையும் பார்த்து சிரிப்பார்கள். நீங்கள் மட்டும்தான் அப்படி செய்யமாட்டீர்கள். ஆரம்பத்தில் இது எனக்கும் நடந்தது. இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், அதை நிரூபித்துக்காட்டும் நாளில் மிகப்பெரிய உணர்வு ஏற்படும் அன்று அவர்கள் சொன்னதை தவறு என்று நிரூபிப்பீர்கள். கவனம் செலுத்துங்கள். கடுமையாக உழையுங்கள் அதனை விட்டுவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் டீன் சிங்கம் வளர்த்து அதனை இப்படி தூக்கி விளையாடி பலரையும் வியக்க வைத்துள்ளார். நிச்சயமாக மற்றவர்களால் இப்படி சிங்கத்தை தூக்கி விளையாட முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விதான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"