/indian-express-tamil/media/media_files/2024/11/14/EPyRpghklSwmBXnWy2S2.jpeg)
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இந்த பாலத்தின் மையப் பகுதியில் சுமார் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவில் திறந்து மூடும் வகையிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. புதிய பாலத்தில் பல்வேறு கட்ட சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த புதிய பாலத்தை ஆய்வு செய்வதற்காக பெங்களூருலிருந்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம். சவுத்ரி நேற்று பாம்பன் வந்தார். நேற்று பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இருந்தபடி முழுமையாக ஆய்வு செய்தார்.
பாம்பன் புதிய பாலத்தில் சீறிப் பாய்ந்த ரயில்#Rameshwaram#Train#Railwaypic.twitter.com/sElJ0hURE7
— Indian Express Tamil (@IeTamil) November 14, 2024
2-வது நாளாக இன்றும் தென்னக ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் வரை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் முன்னிலையில் 60 கி.மீ முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது ரயில் என்ஜினுடன் 7 பெட்டிகள் பொருத்தப்பட்டு இருந்தன.
பாம்பன் புதிய பாலத்தில் சீறிப் பாய்ந்த ரயில்; டிரோன் காட்சி#Rameshwaram#Train#Railwaypic.twitter.com/pquEvBIKCb
— Indian Express Tamil (@IeTamil) November 14, 2024
அத்துடன், செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கியும், இறக்கியும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பின்னர் புதிய ரயில் பாலத்தின் திறப்பு விழா தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சக்தி சரவணன்- மதுரை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.