என்னது நூடுல்ஸை ஒழிக்கனுமா? சீன பொருட்கள் எதிர்ப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?

நாம மட்டும் இல்லைங்க... இப்படி ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்கை சீனாவே கூட எதிர்பார்த்திருக்காது தான்... சார்ந்தோருக்கு அனுதாபங்கள் சொல்வதை தவிர நமக்கும் வேறு வழி தெரியவில்லை.

By: Updated: June 19, 2020, 10:51:52 AM

‘Spare gobi manchurian’: How netizens reacted to a minister’s call to ban Chinese food : இந்தியா மற்றும் சீன எல்லையில் நிலவி வரும் பதட்டமான சூழல் காரணமாக பலரும் சீன பொருட்கள் எதிர்ப்பு என்பதை முன்வைத்து சமூகவலைதளங்களில் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர். ஏற்கனவே ”கோ கொரோனா கோ” மூலம் உலக பிரசித்தி பெற்ற மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சீன உணவுகளையும், உணவகங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று தற்போது கூறியுள்ளார்.

தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ”சீனா ஒரு ஏமாற்றும் நாடு. நாம் அனைவரும் சீனாவில் இருந்து வரும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் சீன உணவுகள் மற்றும் அதனை விற்பனை செய்யும் உணவுகங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் சீன உணவு வகைகளை புறக்கணித்தால் இதனால் நஷ்டம் அடையப் போவது யார் என்று யோசிக்கவில்லையா என்று நெட்டிசன்கள் அமைச்சரின் கருத்தை சோயா சாஸ் ஊற்றி வறுத்தெடுத்துள்ளனர்.

நாம மட்டும் இல்லைங்க… இப்படி ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்கை சீனாவே கூட எதிர்பார்த்திருக்காது தான்… சார்ந்தோருக்கு அனுதாபங்கள் சொல்வதை தவிர நமக்கும் வேறு வழி தெரியவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Spare gobi manchurian how netizens reacted to a ministers call to ban chinese food

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X