New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/19/Zt9SN7359aZwAGHtafqG.jpg)
பெங்களூருவில், தங்க விரும்பினால் இந்தியில்தான் பேச வேண்டும் என்று ஆட்டோ டிரைவரிடம் இளைஞர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு மொழி ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில், தங்க விரும்பினால் இந்தியில்தான் பேச வேண்டும் என்று ஆட்டோ டிரைவரிடம் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு மொழி ஆர்வம் கொண்ட கன்னடர்கள் பலர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று, நள்ளிரவில் கிளப்பிற்கு ஆட்டோவில் ஒரு இளம்பெண்ணுடன் வந்திறங்கிய 2 இளைஞர்கள் ஆட்டோ ஓட்டுநரிடம் வாய் சவடால் விட்டனர். பெங்களூருவில், தங்க விரும்பினால் இந்தியில்தான் பேசனும் என்று அந்த இளைஞர் சீறினார். அந்நேரத்தில் அவரது நண்பர்கள் அவரை அமைதிப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், "பெங்களூரு நீங்கள் தான் வந்திருக்கிறீர்கள், நீங்கள் கன்னடத்தில் பேசும்போது நான் எதற்கு இந்தியில் பேச வேண்டும். பேச மாட்டேன் என்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில், குறிப்பாக கன்னடர்கள் மத்தியில் பரவலான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.
ಹಿಂದಿ ನಮ್ಮ ರಾಷ್ಟ್ರ ಭಾಷೆ ಅಲ್ಲ. pic.twitter.com/sKBlGmbdX0
— ವಿನಯ್. ಎಸ್. ರೆಡ್ಡಿ (@Vinayreddy71) April 18, 2025
எக்ஸ் தளத்தில் பயனர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த இளைஞர் மொழியியல் திமிர் கொண்டவர் என்று குற்றம்சாட்டினர். "நான் கன்னட ஆதரவு குண்டர்களை ஆதரிக்கவில்லை, ஆனால் வீடியோவில் உள்ள இந்தி பையன் பெல்ட் சிகிச்சைக்கு தகுதியானவர் என மற்றொரு பயனர் குறிப்பிட்டிருந்தார். அவர் வேறு எங்கிருந்தோ இங்கு வந்திருக்கிறார், உள்ளூர்க்காரர்கள் அவரது மொழியைப் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? என்று மற்றொரு பயனர் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆணவமும் வெறுப்பும் இந்தியுடன் வருகிறது! மற்றவர்கள் தங்கள் மொழியில் பேச வேண்டும் என்று கோரும் தைரியம் வேறு எந்த மொழி பேசுபவர்களுக்கும் இல்லை. மொழி என்பது தகவமைப்பு பற்றியதாக இருக்க வேண்டும், ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று ஒருவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்தியாவுக்கு என தேசிய மொழி என்று எதுவும் இல்லை என்று பல பயனர்கள் சுட்டிக்காட்டினர். அனைவரும் இந்தி பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு தவறான கருத்து என்று வலியுறுத்தினர். முறையான கல்வி இல்லாதவர்களுக்குத்தான் இது தெரியாது" என்று ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.