ஸ்கூட்டியில் மின்னல் வேகம்… நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் – ஷாக்கிங் வீடியோ

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் வீடியோவை பார்த்த பலரும், இதில் யார் மீது தப்பு என விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ஸ்கூட்டரில் அதிவேகத்தில் வந்த இளைஞர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பேருந்தின் மீது நேருக்கு நேராக மோதிக்கொள்ளாமல், சிறிய கேப்பில் ஸ்கூட்டரை தடுமாறாமல் இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சாலையில் வந்துகொண்டிருந்த பேருந்து, வளைவு வரும் இடத்தில் u turn எடுத்தது. அப்போது, அதிவேகத்தில் ஸ்கூட்டியில் வந்த இளைஞர் அருகில் வந்தபிறகே, பேருந்தை கவனித்துள்ளார். அவர் வந்த வேகத்தில் வண்டியை நிறுத்தினாலோ, திருப்பினாலோ விபத்து ஏற்பட்டுவிடும் என்பதால், அதே வேகத்தில் சாலையில் ஓராமாக வண்டியை ஓட்டினார். பேருந்துக்கும், சுற்றுசுவருக்கும் இடையில் நுழைந்து, பிறகு அருகே உள்ள பெட்டிக்கடை ஒன்றுக்கும், மரத்துக்கும் இடையே நுழைந்தது உயிர் தப்பினார்.

இதில், அவரது ஹெல்மெட் கீழே விழந்த நிலையில், ஸ்கூட்டியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச்சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் வீடியோவை பார்த்த பலரும், இதில் யார் மீது தப்பு என விவாதிக்க தொடங்கியுள்ளனர். ட்விட்டர் பயனாளர் ஒருவர், u turn எடுக்கையில் இன்டிகேட்டர் போடமாலும், சாலையில் யாராவது வருகிறார்களா என்பதை பார்க்காமலும் திரும்பிய பேருந்து ஓட்டுநர் மீது தான் தவறு என பதிவிட்டிருந்தார்.

மற்றொரு நபர், இதற்கு அதிவேகமாக வந்த இளைஞரும், பேருந்து ஊழியரின் கவனக்குறைவும் தான் காரணம். ஆச்சரியமாக உயிர் பிழைத்தார் என சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருவரையும் காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Speeding scooter rider avoids collision with bus in nick of time

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com