New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/20/spider-man-mumbai-rain-2025-08-20-18-59-02.jpg)
தொடர்ந்து ஐந்தாவது நாளாக பெய்து வரும் கனமழையால், மும்பை, தானே, பால்கர், ராய்கட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன் மூலம் 40-50 கிமீ வேகத்தில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. Photograph: (Image Source: @shaddyman98/Instagram)
கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை நகரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, குடியிருப்பாளர்கள் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் தத்தளித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த சாலைகள் பற்றிய காட்சிகள் நகரத்தின் மோசமான உள்கட்டமைப்பு குறித்து சீற்றத்தைத் தூண்டியுள்ள நிலையில், ‘ஸ்பைடர்-மேன்’ உடையணிந்த ஒருவர், நகரத்தையும் அதன் குடியிருப்பாளர்களையும் "காப்பாற்ற" முயற்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Advertisment
இந்த வீடியோ கிளிப்பில், ‘மும்பையின் ஸ்பைடர்-மேன்’ என்று தனது 78 லட்சம் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களால் பிரபலமாக அறியப்படும் அந்த நபர், முழு உடையுடன் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் செல்வதைக் காணலாம். ஒரு டாய்லெட் வைப்பரை ஏந்தியபடி, வெள்ளத்தை அகற்ற முயற்சிப்பது போன்ற தோற்றத்தை அவர் அளிக்கிறார்.
“நான் இப்போது பல வெள்ளப் பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும்” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் தலைப்பில் எழுதினார்.
வைரல் வீடியோவை பாருங்கள்:
Advertisment
Advertisements
இந்த வீடியோ சமூக வலைதள பயனர்கள் இடையே விவாதத்தை தூண்டியுள்ளது. “மிஷன் இம்பாசிபிள்” என்று ஒரு பயனர் எழுதினார். “ஸ்பைடி, இப்போது முழு மும்பையும் உங்களைச் சார்ந்துள்ளது, தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.
“மழையில் ஸ்பைடர்-மேன் அவதிப்படுகிறார்” என்று மூன்றாவது பயனர் கூறினார்.
இதற்கிடையில், கனமழை அமிதாப் பச்சனின் பிரசித்தி பெற்ற ஜுஹு பங்களாவான பிரதீக்ஷாவையும் பாதித்துள்ளது. குடியிருப்புக்கு வெளியே கணுக்கால் ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியிருப்பதை ஒரு வீடியோ காட்டியது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக பெய்து வரும் கனமழையால், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) புதன்கிழமை அன்று மும்பை, தானே, பால்கர், ராய்கட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இது 40-50 கிமீ வேகத்தில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதைக் குறிக்கிறது. மகாராஷ்டிரா பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 15 முதல் 19 வரை மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.