பொதுவாக ஆப்டிக்கல் இல்லுசன் படங்கள் மூளை, கண்ணுக்கு நல்ல பயிற்சியாக உள்ளன. நாம் தற்போது பார்க்கப் போகும் படம் உங்கள் கண்ணுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். மேலும், ஆப்டிக்கல் மாயை படங்கள் நமது கற்பனை திறனை கூட்டுவதோடு மூளையையும் சுறுசுறுப்பு ஆக்குகின்றன. மேலும், இதுபோன்ற படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
Advertisment
இதுமட்டுமின்றி, இந்த ஒளியியல் மாயைகள் பொழுதுபோக்கு மட்டுமல்ல, மூளைக்கும் நன்மை பயக்கும். ஆப்டிகல் மாயைகள் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நமது மூளை மற்றும் கண்கள் எவ்வாறு உணர்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், மூளை எவ்வாறு யதார்த்த உணர்வை உருவாக்குகிறது என்பதை ஆய்வு செய்ய நரம்பியல் விஞ்ஞானிகள் ஆப்டிகல் மாயை படங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
தற்போது நாம் பார்க்கும் இந்தப் படத்தில் பாம்பு ஒன்று ஒளிந்துள்ளது. அதை 3 நொடிகளில் கண்டுபிடிங்க. சிலர் பார்த்த உடன் பாம்பை கண்டுபிடித்து இருப்பீர்கள். அவர்கள் பொறுமை காக்கவும், பாம்பை கண்டுபிடிக்க முடியாதவர்கள் தொடர்ந்து முயற்சி செய்யவும். பாம்பானது நடுமத்தியில் உள்ளது.
மேலும், கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஏமாறத் தேவையில்லை. பயிற்சியின் மூலம் நீங்கள் எப்போதும் சிறந்து விளங்கலாம். அது தற்போது கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“