New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/02/2-Copy-2-68.jpg)
sreesanth twitter sreesanth video twitter viral
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு அளிக்க மறுக்கப்பட்டது.
sreesanth twitter sreesanth video twitter viral
sreesanth twitter sreesanth video twitter viral : சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்ட ஸ்ரீசாந்த் ஹீரோ, பிக் பாஸ் நிகழ்ச்சி என ரவுண்டு வந்தார். அதனைத்தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் ஸ்ரீசாந்தை ஐபிஎல் போட்டியில் காணலாம் எனவும் தகவல் வெளியாகியது. ..
தோனியை தல என்று அழைக்க கூடாது.. ஒரே தல அஜித் மட்டும்தான் என்று கூறி ஸ்ரீசாந்த் கடந்த வருடம் டிவிட் வெளியிட்டு இருந்தார். தோனிக்கு எதிராக பலமுறை இப்படி கருத்து கூறி ஸ்ரீசாந்த் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
இந்நிலையில், இவரின் வயதை காரணம் காட்டியும், பல வருடமாக இவர் கிரிக்கெட் ஆடாத காரணத்தாலும் இவரின் பெயரை ஐபிஎல் அணி நிர்வாகம் எடுக்கவில்லை. சையது முஷ்டாக் கோப்பை தொடரிலும் இவர் சரியாக ஆடவில்லை என்பதை சுட்டிக்காட்டியும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு அளிக்க மறுக்கப்பட்டது.
@ThalaFansClub @ajithFC love u all.. it’s just the beginning..#grateful #blessed #bcci #family #kca #cricket pic.twitter.com/efMO9ZkfOT
— Sreesanth (@sreesanth36) February 12, 2021
இந்நிலையில், தான் மீண்டும் உற்சாகத்துடன் திரும்ப வரேன் என்று ஸ்ரீசாந்த் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்... எல்லா சூழ்நிலையிலும்...'நீ தோத்துட்ட... நீ தோத்துட்டன்னு ‘உன் முன்னாடி நின்னு அலறினாலும்... நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது...! என்ற விவேகம் படத்தின் வசனத்தை வைத்த வீடியோ வெளியிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.