Viral Sri Lankan Minister News: தேங்காய் பற்றாக்குறை பற்றி மக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக, இலங்கையைச் சேர்ந்த அமைச்சர் தென்னை மரம் எறி, மரத்திலிருந்தபடி பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்புக்காக, இலங்கை அமைச்சரான அருந்திகா ஃபெர்னாண்டோ, டன்கோடுவாவில் (Dankotuwa) உள்ள தன் தோட்டத்திலுள்ள ஒரு தென்னை மரத்தில் எறியுள்ளார்.
தேங்காய், கிதுல், பாமிரா மற்றும் ரப்பர் சாகுபடி மற்றும் அதன் தொழில்துறை தயாரிப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் ஆகியவற்றின் மாநில அமைச்சராக இருக்கும் பெர்னாண்டோ, வரகபோலாவைச் சேர்ந்த உள்ளூர் கண்டுபிடிப்பாளரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வகையான கியரைப் பயன்படுத்தி தென்னை மரத்தில் ஏறியதாக அடதேரானா பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
Advertisment
"தேங்காய் சாகுபடிக்கு உகந்த ஒவ்வொரு நிலத்தையும் சரியாகப் பயன்படுத்தி, நாட்டிற்கு அந்நிய செலாவணியை உருவாக்கும் தொழில்துறையை உயர்த்துவோம் என நாங்கள் நம்புகிறோம்" என்று அமைச்சர் கூறியதாக நியூஸ் ஃபர்ஸ்ட் சேனல் மேற்கோள்காட்டியுள்ளது.
மரத்தின் மேல் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகெங்கிலும் தேங்காய் தொடர்பான பொருட்களுக்கான தேவை அதிகமாக இருப்பதனால் தேங்காய்களின் விலை அதிகரித்துள்ளது என்றார். மேலும், தேங்காய்களை எடுப்பதற்காக வேலை செய்பவர்களுக்கு ஒரு மரத்திற்கு LKR 100 செலுத்த வேண்டும் என்றும் கூறினார். கன்று உற்பத்தி செய்வதற்கும், தேர்ந்தெடுப்பதற்கும் ஊழியர்களில் கடுமையான சரிவு காணப்பட்டாலும், விலை அதிகரித்த இவ்வேளையில் தேங்காய்களை இறக்குமதி செய்ய முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"