Actress Sri Reddy News: தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்களை கதிகலங்கவிட்ட நடிகை ஸ்ரீரெட்டி அனைவரையும் ஈர்க்கும்படியாக சேலை கட்டுவது எப்படி என்று வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.
நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா இயக்குனர்கள், நடிகர்கள் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறி குற்றம் சாட்டி கோலிவுட்டையும் டோலிவுட்டையும் கதிகலங்க வைத்தார். ஸ்ரீரெட்டி வெளியிட்ட பல வீடியோக்களும் பதிவுகளும் சினிமாத்துறையைச் சேர்ந்த பலரையும் அச்சம் கொள்ள வைத்தன. ஒரு கட்டத்தில் ஸ்ரீரெட்டி என்ன வீடியோ வெளியிடுவாரோ, யார் மீது புகார் சொல்லப்போகிறாரோ என்று பலரும் கவலை கொண்டிருந்தனர். ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு சினிமா துறையில் சிலர் ஆதரவாக குரல் கொடுத்தனர். என்றாலும், அவருக்கு நிறைய எதிரிகள்தான் உருவானார்கள்.
இதனிடையே, ஸ்ரீரெட்டி சமூக ஊடகங்களில், தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிக் கவர்ந்து வந்தார். இவரது புகைப்படங்களைஇ காணவே பல ஆண் ரசிகர்கள் அவரது சமூக ஊடகப் பக்கங்களை பின்தொடர்ந்து வருகின்றனர். ஸ்ரீரெட்டிக்கு ஆண் ரசிகர்களைக் காட்டிலும் பெண் ரசிகைகள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். அதனால்தான் என்னவோ ஸ்ரீரெட்டி பெண்களையும் கவர முடிவு செய்து சேலை கட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு பெண்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
ஸ்ரீரெட்டி அழகாக சேலை கட்டுவது எப்படி என்று தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில், ஸ்ரீரெட்டி காஞ்சிபுரம் பட்டு சேலையை திருமணம் மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகள் விழாக்களுக்கு எப்படி அணிய வேண்டும் என்று பேசி சேலை எப்படி கட்ட வேண்டும் என்பதை விவரித்து பேசியுள்ளார். அழகாக சேலை கட்டுவது எப்படி என்று ஸ்ரீரெட்டி வெளியிட்ட ஒரே வீடியோவில் பெண்களின் மனம் கவர்ந்துள்ளார்.