Advertisment

கண்களை குளமாக்கும் சம்பவம்.. 70 வயதில் எலும்பும் தோலுமாக இருக்கும் யானை திருவிழாவில் கட்டாயப்படுத்தப்படும் கொடுமை!

முடியாத வயதில் முற்றிலும் ஓய்வு எடுக்க வேண்டிய டிக்கிரியை அந்த கோயிலில் திருவிழா நேரத்தில் வீதி உலா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
srilanka elephant photo viral

srilanka elephant photo viral

srilanka elephant photo viral :யானை.. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான விலங்கு. அதன் தோற்றமும், கம்பீரமும், பிரம்மாண்டமும் நம்மை ஆச்சரியப்படுத்தும். யானையை தொட்டு பார்க்க வேண்டும். அதன் அருகில் நிற்க வேண்டும் என்று நாம் ஆசைப்படாத நாட்களே இல்லை. ஆனால் இப்போது 70 வயதுடையை டிக்கிரி என்ற யானையின் புகைப்படம் மொத்த வலைத்தளத்தையும் புரட்டி போட்டுள்ளது.

Advertisment

இந்த ஃபோட்டோவை கண்டு கண்ணீர் வடிக்காத இணையவாசிகளே இல்லை. என்ன நடந்தது டிக்கிரிக்கு வாங்க பார்க்கலாம்.

இலங்கையில் உள்ள கண்டியில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழா இந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நேற்று முன் தினம் நிறைவடைந்தது.

இந்தத் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட யானைகளும், 200-க்கும் அதிகமான கலைஞர்களும் பங்கேற்றனர். திருவிழாவில் கலந்துகொள்ளும் யானைகளில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையும் ஒன்று. முடியாத வயதில் முற்றிலும் ஓய்வு எடுக்க வேண்டிய டிக்கிரியை அந்த கோயிலில் திருவிழா நேரத்தில் வீதி உலா அழைத்து சென்று கட்டாயப்படுத்துவதாக சர்ச்சை வெடித்துள்ளது.

இந்த டிக்கிரியின் புகைப்படத்தை சேவ் எலிபேண்ட் என்ற அமைப்பு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

இந்தடிக்கிரி பற்றிக் குறிப்பிட்டுள்ள சேவ் எலிபேண்ட் (Save Elephant ) அறக்கட்டளை டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று.

திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர். அதனால் டிக்கிரி மிகவும் கஷ்டப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. டிகிரியை இந்த கொடுமையில் இருந்து காப்பாற்ற பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமில்லை, வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகம் இதுக் குறித்து விசார்ணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

Social Media Viral Social Media
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment