சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், ஒரு பாடலுக்கு நடனமாடுவது போல் வெளியாகியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் முத்தையா முரளிதரன். 1972-ம் ஆண்டு இலங்கையின் கண்டியில் பிறந்த இவர், 1992-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். தொடர்ந்து தனது திறமையான சுழற்பந்து வீச்சின் மூலம் பல சாதனைகளை படைத்த முரளிதரன், கடந்த 2011-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
133 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ள முரளிதரன், 800 விக்கெட்டுகள் வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சர்வதேச சாதனையை படைத்துள்ளார். இதில் 22 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முரளிதரன், ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1996-ம் ஆண்டு உலககோப்பை வென்ற இலங்கை அணியில் ஒரு வீரராக பங்கேற்றிருந்தார்.
அதேபோல் 2007 மற்றும் 2011-ம் ஆண்டு உலககோப்பை தொடர்களில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் முரளிதரன் பெரும் பங்கு வகித்திருந்தார். 2011 உலககோப்பை தோல்விக்கு பின் சர்சதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முரளிதரன், தற்போது ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். மேலும் இவரின் வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டு சமீபத்தில் வெளியானது.
SRH Bowling Coach Muttaiah Muralidharan Vibing To Tauba Tauba 🎉pic.twitter.com/utaTMzTBqw
— Johnnie Walker🚁 (@Johnnie5ir) July 30, 2024
தற்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக இருக்கும் முரளிதரன், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில், அவர் நடனமாடுவது போன்ற ஒரு வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பதிவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சிலர், முரளிதரனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல் சிலர் இது முரளிதரன் இல்லை. டான்ஸர் கிரன் என்று கூறி வருகின்றனர்.
The person in the Video is not Cricketer Muttaiah Muralidharan but is Choreographer Kiran
— Shani Mishra | शनि मिश्रा (@mishra_shani) July 31, 2024
இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், இது குறித்து முரளிதரன் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.