தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு என்ற கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.தர்ஷினி மற்றும் அவரது குடும்பத்தினருடன் கடந்தாண்டு (2022) ஏப்ரல் 15ஆம் தேதி உணவருந்தினார்.
ஏழாம் வகுப்பு மாணவியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் முதலமைச்சருக்கு காபி கொடுத்து காலை உணவை சாப்பிடும்படி கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து, மு.க. ஸ்டாலினுக்கு, சாம்பார், சட்னி மற்றும் நாட்டுக் கோழி (‘நாட்டு கோழி’) கறியுடன் ஒரு தட்டில் இட்லி மற்றும் வடை பரிமாறப்பட்டது.
இதற்கிடையில் இடையே புறாக் கறி பற்றி பேச்சு அடிபட மு.க. ஸ்டாலின் அங்கிருந்து எழுந்து சென்றுவிடுவார்.
இந்த வீடியோ ஓராண்டு பிறகு தற்போதும் வைரலாகி வருகிறது. வடிவேலு நடித்த படத்தின் காட்சி ஒன்றுடன் இணைந்து ஜஸ்ட் ஃபன் என்ற தலைப்பில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“