Steve Irwin daughter post remembering her dad : க்ரோக்கோடைல் ஹண்டர் என்று பலராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் இயற்கை ஆர்வலர் ஸ்டீவ் ஐர்வின். அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தின் போது உயிரிழந்தார். அவருடைய 15ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவருடைய மகள் பிந்தி ஐர்வின் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஸ்டீவின் பேத்தியின் புகைப்படத்தை பதிவிட்டு, ஸ்டீவ் ஐர்வின் ரிசர்வ்வில் தாத்தா குறித்த புகைப்படங்களையும், அவர் செய்திருந்த பணிகள் குறித்தும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். என்னுடைய தந்தை இப்போது அவரின் பேத்தியை கொஞ்ச வேண்டும் என்று மனதார நினைக்கின்றேன் என்று பிந்தி தன்னுடைய மகள் க்ரேஸ் வாரியரின் புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய தந்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டீவ் 2006ம் ஆண்டு ஸ்டிங்க்ரே பார்ப் தாக்கியதில் உயிரிழந்தார். டக்லஸ் துறைமுகத்தில் நீருக்கு அடியே ஆவணப்படம் எடுக்கும் போது அவர் உயிரிழந்தாக கார்டியன் செய்தி வெளியிட்டிருந்தது. ஸ்டிங்க்ரே கடித்தவுடன் அவருக்கு அவசர உதவி வழங்கப்பட்டது. மருத்துவர்கள் வருவதற்கு முன்பு 44 வயதான ஸ்டீவ் ஐர்வின் உயிரிழந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil