பாலியல் சிறுபான்மையினர் மற்றும் தன்பாலின ஈர்ப்பினர்களை பொது சமூகம் அங்கிகரித்து ஏற்றுக் கொள்ளும் வகையில் வானவில் அல்லது ரெய்ன்போ இயக்கம் உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. சின்னஞ்சிறிய நடவடிக்கைகள் கூட பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒருவரின் தனிப்பட்ட தேர்வுகளுக்காக அவர்களை ஒதுக்குவதோ அவர்களிடம் இருந்து விலகி நிற்பதோ நல்லதல்ல என்பதை உணரும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த டிவி ரைட்டர் கஸ் கான்ஸ்டண்டெலியஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தன்னுடைய அப்பா நடத்தும் கடை ஒன்றின் புகைப்படத்தை பதிவிட்டு அதில் வானவில் கொடி சரியாக பொருத்தப்பட்டிருக்கிறதா என்று தன் கேட்ட மெசேஜின் ஸ்க்ரீன்ஷாட்டை ஷேர் செய்துள்ளார்.
இந்த சிறு முயற்சியும் அழகான ட்வீட்டும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா என்று கஸ் தன்னுடைய அப்பாவிடம் கேட்ட போது, வருமானத்திற்காகவும் தொழில் நன்றாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் நான் இதை செய்யவில்லை. மாறாக நம்முடைய வாடிக்கையாளர்களில் பலர் ஓர் பாலின ஈர்ப்பாளர்களாக இருக்கின்றார்கள். அவர்களை வரவேற்கும் பொருட்டு, இந்த கொடி வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்த ட்வீட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த நடவடிக்கையை மிகவும் நெகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil