திகைக்க வைக்கும் வீடியோ: வேட்டையாட வந்த சிங்கத்தை காட்டுக்குள் விரட்டி அடித்த நாய்!

நாயை பார்த்து பயந்த சிறுத்தை திரும்பி காட்டுக்குள் ஓடி விட்டது.

வெறித்தனமாக வேட்டையாட வந்த சிறுத்தை, குரைத்தப்படியே காட்டுக்குள் விரட்டி அடித்த நாயின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வைரல் வீடியோ:

சிறுத்தை vs நாய்..  இந்த இரண்டில் யாருக்கும் பலம் அதிகம் என்றால் அது சிறுத்தை தான். அப்படிப்பட்ட சிறுத்தையையே நாய் ஒன்று விரட்டி அடித்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?  ஆனால் ராஜாஸ்தானில் இந்த சம்பவம் உண்மையாகவே அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் உள்ள ஜஹ்லானா வன சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் சாஃபாரி செல்வது வழக்கமான ஒன்று. அப்படி சாஃபாரி சென்ற சுற்றுலா பயணிகளின் செல்போனில் இந்த அரிய காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த காட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்து வந்த 2 வயது நாய் மீது சிறுத்தை ஒன்று பாய முயற்சித்தது. தன் மீது பாய்ந்த சிறுத்தையை பார்த்து நாய் சிறிது நேரம் திகைத்து நின்றது. பிறகு இடைவிடாது சத்தமிட்டு குரைக்கத் தொடங்கியது. சிறுத்தையைக் கண்டு கொஞ்சமும் அசராத அந்த நாய், சிறுத்தையை முறைத்தப்படியே துரத்தி அடித்தது.

நாயை பார்த்து பயந்த சிறுத்தை திரும்பி காட்டுக்குள் ஓடி விட்டது. இந்த காட்சியை நேரில் கண்டவர்கள் மிகவும் சிலிர்ப்பான தருணம் என்று வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close