/indian-express-tamil/media/media_files/2025/08/24/stray-dog-fights-leopard-2025-08-24-17-40-48.jpg)
மகாராஷ்டிராவின் நாசிக்கில் சிறுத்தையை தெருநாய் கடுமையாகத் தாக்கி இழுத்துச் சென்றது. Photograph: (Image Source: @nextminutenews7/X)
மகாராஷ்டிராவின் நாசிக் நகரிலுள்ள நிபாட் பகுதியில், ஒரு தெருநாய் சிறுத்தையை எதிர்த்து சண்டையிட்டு வீழ்த்திய பரபரப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். அப்போது காட்டில் இருந்து வந்த சிறுத்தை கிராமத்திற்குள் நுழைந்துள்ளது.
இந்த வீடியோவில், தெருநாய் ஒன்று சிறுத்தையுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவது தெரிகிறது. மேலும், சண்டைக்குப் பிறகு, சிறுத்தையை தெருநாய் சுமார் 300 மீட்டர் தூரம் இழுத்துச் செல்கிறது. இதனைக் கண்ட மற்றொரு நாய் அவற்றுக்கு அருகில் நிற்கிறது. இதுகுறித்து எக்ஸ் சமூக ஊடகத்தில் நெக்ஸ்ட் மினிட் நியூஸ் (@nextminutenews7) என்ற பக்கத்தில், "மகாராஷ்டிராவின் நிபாட் தாலுகா, நாசிக் மாவட்டத்தில், கங்கார்டே வஸ்திக்கு அருகில் ஒரு தெருநாய், சிறுத்தையை விரட்டிச் சென்று வாயில் கடித்துக்கொண்டு சுமார் 300 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது” என்று பதிவிட்டுள்ளது.
Niphad taluka, Nashik district, Maharashtra, a stray dog chased and overpowered a leopard near Gangurde Vasti, dragging it by the mouth for approximately 300 meters before the leopard fled. #leopard#dogs#attack#viralvideo#animalspic.twitter.com/BJWeoS4y52
— NextMinute News (@nextminutenews7) August 22, 2025
இதைப் பார்த்த பயனர்கள், "சிறுத்தை மிகவும் பலவீனமாகவோ அல்லது காயமடைந்தோ இருந்திருக்க வேண்டும்" என்றும், "ஆரோக்கியமான சிறுத்தை ஒரு சிங்கத்தையே எதிர்க்கும், ஆனால், இந்த சிறுத்தை பசியால் வாடியதாகவோ அல்லது காயம் அடைந்ததாகவோ இருக்கலாம்" என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
என்.டி.டிவி வெளியிட்ட செய்தியின்படி, சிறுத்தை தன்னைத் தாக்க வந்தபோது, தெருநாய் பின்வாங்கவில்லை. அதற்குப் பதிலாக, அது ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தச் சண்டையில், நாய் சிறுத்தையைப் பிடித்து சுமார் 300 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது.
“சிறுத்தையால் நாயின் திடீர் மற்றும் ஆக்ரோஷமான தாக்குதலைத் தாங்க முடியாமல், இறுதியில் அதனிடமிருந்து தப்பித்து ஓடியது” என்று நேரில் பார்த்த நபர் ஒருவர் என்.டி.டிவி-யிடம் தெரிவித்துள்ளார். இந்த மோதலுக்குப் பிறகும், நாய் எந்த காயமும் அடையவில்லை என்றும், உள்ளூர்வாசிகளுக்கும் எந்தத் தீங்கும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சிறுத்தை அருகிலுள்ள வயல்வெளிகளுக்குள் தப்பி ஓடியதாகவும், அது காயமடைந்ததாகத் தோன்றினாலும், அதற்கு மருத்துவ சிகிச்சை தேவையா என்பதை வனத்துறையினர் இன்னும் கண்டறியவில்லை என்றும் அந்த செய்தி கூறுகிறது. மேலும், இந்தச் சம்பவத்தால் கிராம மக்களுக்கோ அல்லது வளர்ப்பு விலங்குகளுக்கோ எந்தத் தீங்கும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.