New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-37.jpg)
subhashree tik tok video
பெற்றோர்கள் கதறிக் கொண்டே பதிவு செய்த கருத்துக்கள் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.
subhashree tik tok video
subhashree tik tok video : சுபஸ்ரீ இந்த பெயரை தமிழகம் அவ்வளவு எளிதாக மறந்து விடாது. பேனரால் பறிப்போனது சுபஸ்ரீ-யின் உயிர். இவரின் பிறப்பு சாதாரணமாக இருந்தாலும், இவரிம் இறப்பு புரட்சியாக மாறி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஆழமான கருத்தை பதிவு செய்துவிட்டு சென்றுள்ளது.
நாள் ஒன்றுக்கு எத்தனையோ இறப்பு செய்திகள் நம் காதில் வந்து விழந்தாலும், கடந்த வாரம் பல்லாவரத்தில் பேனரால் பறிப்போன சுபஸ்ரீயின் இறப்பு செய்தி அதனைத் தொடர்ந்து வெளியான வீடியோ நம் கண்களை கசிய வைத்து விட்டது. வீட்டிற்கு ஒரே பெண், பெற்றோருக்கு செல்ல மகள், படிப்பில் படு சுட்டி, நண்பர்களுக்கு நல்ல தோழி என சுபஸ்ரீ குறித்து அவரின் உறவினர்கள் பெற்றோர்கள் கதறிக் கொண்டே பதிவு செய்த கருத்துக்கள் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.
வாழ வேண்டிய வயதில் அநியாயமாக சுபஸ்ரீ உயிர் பறிப்போனதற்கு இணையத்தில் அனைவரும் எதிர்ப்பு குரல்களை பதிவு செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து அவசர வழக்காக விசாரித்தது. பேனர் கலாச்சாரத்தை இதோடு ஒழிக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளும்.
இந்நிலையில், சுபஸ்ரீ டிக் டாக்கில் அதிக ஆர்வமாக இருந்துள்ளார். படிப்பில் இருந்த அதே ஆர்வம் அவருக்கு டிக் டாக்கிலும் இருந்துள்ளது. இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட டிக் டாக்கில் புதிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இவை அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.