Viral Video: ஒரு காட்டில், சுற்றுலாப் பயனிகள் வாகனத்தில் இருந்தபடி, வனவிலங்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென இரண்டு காண்டாமிருகங்கள் ஆக்ரோஷமாக பாய்ந்து வர சுற்றுலாப் பயனிகள் தெறித்து ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.
காட்டில் வன விலங்குகளை வேடிக்கைப் பார்க்கச் செல்வது, அல்லது காடுகளில் சஃபாரி செல்வது என்பது சுற்றுலாத் துறையில் வருமானம் தரக்கூடிய ஒன்றாக இருந்தாலும், மனிதர்கள் கூட்டம் கூட்டமாக சென்று வனவிலங்குகளை வேடிக்கைப் பார்க்கும்போது வனவிலங்குகளின் பிரைவசி பாதிக்கப்படுகிறது. அதனால், வனவிலங்குகள் வெகுண்டெழும்போது மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதலாக மாறுகிறது.
அந்த வகையில், காட்டுக்கு வனவிலங்குகளைப் பார்க்க சஃபாரி சென்ற சுற்றுலாப் பயனிகள் வாகனத்தில் இருந்து விலங்குகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு சில காண்டாமிருகங்கள் ஆக்ரோஷமாக பாய்ந்து வர சுற்றுலாப் பயனிகள் தெறித்து ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஒரு காட்டில் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் இருந்தபடி வனவிலங்குகளை வேடிக்கைப் பார்க்கிறார்கள். அதில் ஒருவர் தனது சிறிய கேமிராவில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். திடீரென காட்டுக்குள் இருந்து 2 காண்டா மிருகங்கள் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து வருகிறது. இதைப் பார்த்து பயந்து கதி கலங்கிப்போன சுற்றுலாப் பயணிகள் கத்தி கூச்சலிடுகின்றனர். அங்கே இருந்த வனக் காவலரும் தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்கிறார். காண்டாமிருகத்தைப் பார்த்து பின்னால் வந்த சுற்றுலாப் பயனிகள் வாகனமும் பள்ளத்தில் தடுமாறி கவிழ்கிறது. காண்டாமிருகம் அவர்களை காயப்படுத்தப் போகிறது என்று அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அந்த காண்டாமிருகங்கள் வேறு வேங்கோ மிரண்டு ஓடுகின்றன. இந்த வீடீயோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “வனவிலங்குகளைப் பார்க்கச் செல்லும் சஃபாரிகளில் என்ன தவறு இருக்கிறது என்பது இங்கே தெரிகிறது. காட்டு விலங்குகளின் பிரைவசியை மதிக்க வேண்டும். முதலில் சுய பாதுகாப்புதான் முக்கியம். காண்டாமிருகம் மற்றும் சுற்றுலா பயணிகள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அந்த அதிர்ஷ்டம் இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.
மக்களே காடுகளுக்கு சஃபாரி செல்பவர்களே வனவிலங்குகளுக்கும் பிரைவசி இருக்கிறது. அதை மதிக்க வேண்டும். இல்லை என்றால், காண்டாமிருகம் வெகுண்டு எழுந்தால் என்ன ஆனது பார்த்தீர்கள் இல்லையா? எச்சரிக்கையாக இருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“