இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) தனது பயணத்தின் காரணமாக தற்போது இணையத்தில் பிரபலமாகி வருகிறார். கூகிள் டிரெண்ட்ஸ்படி, சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டாப் ட்ரெண்டிங் டாப்பிக்காக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. 80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நிலையில் இருவரும் இன்றி ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு திரும்ப உள்ளது.
இதனிடையே, விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா, புட்ச் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது. 8 நாட்கள் ஆய்வுக்காக விண்வெளிக்கு சென்ற இருவரும் தற்போது 8 மாதங்களாக விண்வெளியில் தங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்ற சுனிதா, புட்ச் இருவரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
மனிதகுலம் பிரபஞ்சத்தில் மேலும் முன்னேறும்போது, விண்வெளிப் பயணத்தின் ஆரோக்கிய விளைவுகளைப் புரிந்துகொள்வதும் நிர்வகிப்பதும் பெருகிய முறையில் முக்கியமானதாகிறது. ஏனெனில் நீண்ட கால விண்வெளிப் பயணங்கள் பல உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம், முடுக்கப்பட்ட சிவப்பு இரத்த அணுக்கள் அழிவு, இது 'விண்வெளி' இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.
"இந்த நிகழ்வு, இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், விண்வெளி வீரர்களுக்கு நீண்ட கால பயணங்களில் தனித்துவமான சவால்களை ஏற்படுத்துகிறது" என்று டெல்லி சிகே பிர்லா மருத்துவமனையின் உள் மருத்துவத்தின் முன்னணி ஆலோசகர் டாக்டர் நரேந்திர சிங்லா கூறினார்.
நீட்டிக்கப்பட்ட பணிக்கான போதுமான உணவு மற்றும் ஆக்ஸிஜன் சப்ளைகளுடன் ஐ.எஸ்.எஸ் இருப்பு வைத்திருப்பதை நாசா உறுதி செய்துள்ளது. மேலும் குழுவினரின் தேவைகளை ஆதரிக்க வழக்கமான மறுவிநியோகப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.