பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பாக இருப்பார். அப்போது நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்வார்.
அப்படி சமீபத்தில் படக்குழுவினர் தன் மீது பாம்பை வீசி பயமுறுத்திய ‘கல கல’ வீடியோவை தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சன்னி லியோன். அதில், படக்குழுவிலிருந்து ஒருவர் சன்னி லியோன் மீது பாம்பை வீசுகிறார். அப்போது, சீரியஸாக ஸ்கிரிப்டை படித்துக்கொண்டிருந்த சன்னி லியோன், அதனை வீசிவிட்டு அலறி ஓடுகிறார்.
ஆனால், தன்னை பயமுறுத்திய நபரை அப்படியே விட்டுவிடவில்லை. இரண்டு கேக்குகளை அவரது முகத்தில் பூசி பழிதீர்த்திருக்கிறார் சன்னி லியோன். அந்த வீடியோவையும் தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.